Leo Poster: லியோ ஃபைனல் டச்... விஜய் போஸ்டரில் ஹைப் கொடுத்த லோகேஷ்... மெர்சலான ரசிகர்கள்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லலித் குமார் தயாரிக்கும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது.

டைட்டில் டீசருடன் ரிலீஸ் தேதியை அறிவித்த லோகேஷ், ஆரம்பத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டு இருந்தார்.

 Leo: Leo film Vijay fan-made poster trending on Social Media

இந்நிலையில் தற்போது லியோ படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக சொல்லப்படும் நிலையில், இன்னொரு போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

போஸ்டரில் ஹைப் கொடுத்த லோகேஷ்:மாஸ்டருக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி லியோ படத்தில் இணைந்தது. மாஸ்டர் படத் தயாரிப்பாளார் லலித் குமார் தான் லியோவையும் ப்ரொடியூஸ் செய்து வருகிறார். அதேபோல், இக்கூட்டணியில் அனிருத்தும் இணைந்தது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதேநேரம் இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 Leo: Leo film Vijay fan-made poster trending on Social Media

விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர். டைட்டில் டீசருடன் லியோ படம் குறித்து அபிஸியலாக அறிவித்த லோகேஷ், ஆரம்பம் முதலே ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்து வருகிறார். முதன்முறையாக லியோவில் விஜய் கமிட்டானதும் ஒரு போஸ்டர் வெளியாகியிருந்தது.

அதில், விஜய்யும் இயக்குநர் லோகேஷும் தங்களது கைகளில் இருந்த காப்பு-ஐ கழட்டி, அதில் ஜாலியாக பஞ்ச் வைத்துக் கொள்வதாக இருந்தது. இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலானது. தற்போது லியோ படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அதேபோன்று ஒரு போஸ்டர் மீண்டும் வைரலாகி வருகிறது. ஆனால் இந்த இரண்டு போஸ்டரிலும் விஜய்யின் லுக் மாறியுள்ளது.

 Leo: Leo film Vijay fan-made poster trending on Social Media

அதாவது லியோ ஷூட்டிங் தொடங்கும் போது, விஜய்யின் ஹேர் ஸ்டைல் செம்ம கிளம்ஸியாகவும் ஸ்டைலாகவும் இருந்தது. இந்த லுக்கில் விஜய்யை அவரது ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்பே இல்லை. ஆனால், தற்போது அவரது கெட்டப் மாறிவிட்டது. லியோவில் இரண்டு கேரக்டரில் நடிப்பதால் ஹேர் ஸ்டைலை செம்ம ஸ்மார்ட்டாக மாற்றியுள்ளார் விஜய். இதனால் தற்போது வெளியான போஸ்டரில் விஜய்யின் லுக் வித்தியாசமாக உள்ளது.

ஸ்டைலிஷான லுக்கில் லியோவில் நடிக்கத் தொடங்கிய விஜய், தற்போது செம்ம ஸ்மார்ட்டாக அப்படத்தில் இருந்து வெளியேறுவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதேபோல், விஜய்யின் இந்த இரண்டு கெட்டப்புகளையும் ஒரே போஸ்டரில் டிசைன் செய்துள்ள ரசிகர்கள், அதனையும் ட்ரெண்டாக்கி வருகின்றனர். லோகேஷுக்குப் பதிலாக இரண்டுமே விஜய் என்பதோடு, இருவரது லுக்கும் வித்தியாசமாக இருப்பதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X