Leo: விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் கூஸ்பம்ஸ் மொமண்ட்... லோகேஷின் ஸ்பெஷல் லியோ அப்டேட் ரெடி!
சென்னை: லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.
இதுபற்றிய அபிஸியல் அப்டேட் இதுவரை வெளியாகவில்லை என்பதால் விஜய்யின் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு முன்னர், ஸ்பெஷலான அப்டேட் ஒன்றை கொடுக்க ரெடியாகிவிட்டார் லோகேஷ்.
லியோ படத்தில் இருந்து வெளியாகப் போகும் இந்த அப்டேட், விஜய் ரசிகர்களை தெறிக்கவிடும் என சொல்லப்படுகிறது.

லோகேஷின் ஸ்பெஷல் லியோ அப்டேட் ரெடி: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் லியோவில் மாஸ் காட்ட களமிறங்கியுள்ளது இந்தக் கூட்டணி. விஜய் கேரியர் மட்டும் என்றில்லாமல், கோலிவுட்டிலேயே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படமாக லியோ உருவாகியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. லியோ ரிலீஸாக இன்னும் 3 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த வாரம் விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக லியோ செகண்ட் சிங்கிள் அப்டேட், இசை வெளியீட்டு விழா தேதி போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால் கடைசியாக லியோ இந்தி போஸ்டர் மட்டுமே வெளியானது. இந்நிலையில் லியோ இசை வெளியீட்டு விழா வரும் 30ம் தேதி நடைபெறவுள்ளதாகவும், அதுபற்றிய அப்டேட் விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே தரமான ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். இதுதான் விஜய் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் மொமண்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
கார்த்தி நடித்த கைதியில் இருந்து லீட் எடுத்து, கமலின் விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ். மேலும், விக்ரம் வெற்றி விழாவில், இனி தான் இயக்கும் படங்களில் லோகேஷ் யுனிவர்ஸ் எனப்படும் LCU கான்செப்ட் இருக்கும் எனக் கூறினார். அதனால், விஜய்யின் லியோ படமும் லோகேஷின் யுனிவர்ஸில் இணையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இதுவரை கிடைத்த தகவலின் படி, லியோ லோகேஷ் கனகராஜ்ஜின் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும், இதுபற்றி அபிஸியலாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனையடுத்து ரசிகர்களின் ஹைப்பை எகிற வைக்கும் வகையில், லியோவில் இருந்து ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட லோகேஷ் பிளான் செய்துள்ளாராம். அதில் விஜய்யின் லியோவும் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக, ப்ரொமோ வீடியோவுடன் அறிவிக்க முடிவு செய்துள்ளாராம். இந்த அப்டேட் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு முன்பே வெளியாகிவிடும் எனத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











