Leo: "லியோவில் அந்த சீன்லாம் விஜய் மாத்த சொல்லிட்டார்.. லோகேஷ் ரியாக்ஷன்..”: லலித் குமார் ஓபன்
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் கடந்த 19ம் தேதி ரிலீஸானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன.
முக்கியமாக கைதி, விக்ரம் படங்கள் அளவிற்கு லியோ திரைக்கதை அமையவில்லை என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்நிலையில், லியோ ஸ்க்ரிப்ட்டில் விஜய் சொல்லி லோகேஷ் நிறைய மாற்றங்கள் செய்ததாக தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளார்.

லியோ ஸ்க்ரிப்ட்டில் கரெக்ஷன் சொன்ன விஜய்: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் தரமான ஆக்ஷன் ஜானர் படமாக வெளியான லியோவை, விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜய்யின் எமோஷனலான ஆக்டிங், வெறித்தனமான ஆக்ஷன், டான்ஸ் ஆகியவை ரசிகர்களுக்கான ட்ரீட்டாக அமைந்துள்ளது.
அதேபோல், மேக்கிங்கில் மட்டுமே லோகேஷின் டச் இருப்பதாகவும், கதை, திரைக்கதையில் சொதப்பிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. லோகேஷின் முதல் படமான மாநகரம், கார்த்தி நடித்த கைதி, கமல்ஹாசனின் விக்ரம் ஆகியவை மேக்கிங் மட்டுமின்றி, கதை, திரைக்கதை போன்றவைக்காகவும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.
ஆனால், லியோவில் லோகேஷின் ஸ்க்ரிப்ட் சுத்தமாக எடுபடவில்லை என ரசிகர்களே கூறி வந்தனர். லியோ முதல் பாதி லோகேஷ் படமாகவும், இரண்டாம் பாதி விஜய் படமாகவும் உருவாகியுள்ளது. மொத்தமாக பார்க்கும் போது விஜய், லோகேஷ் என இருவரது படங்களாகவும் லியோ இல்லை என ரசிகர்கள் ஏமாற்றம் தெரிவித்திருந்தனர்.
லியோ படத்தின் கதையில் விஜய் சில திருத்தங்கள் செய்திருக்கலாம், அதனால் விஜய்க்காக இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் விட்டுக் கொடுத்துவிட்டார் எனவும் விமர்சனங்கள் எழுந்தன. அது உண்மைதான் என்பதை தயாரிப்பாளர் லலித் குமார் தற்போது ஒப்புக்கொண்டுள்ளார். இதுபற்றி அவர் கொடுத்த பேட்டியில் லியோ கதையில் விஜய் கரெக்ஷன் சொன்னது பற்றி மனம் திறந்துள்ளார்.

அதாவது பீஸ்ட் முடிந்ததுமே லியோ திரைப்படத்தை தொடங்க நினைத்திருந்தோம். ஆனால் லோகேஷ் அப்போது விக்ரம் படம் இயக்கவிருந்தார். அதனால் தான் விஜய் சார் வாரிசு படத்தில் நடித்துவிட்டு லியோவுக்கு ரெடியானார். அப்போது லோகேஷ் முழு கதையையும் சொல்லிவிட்டார். இருப்பினும் விஜய் சார் சில இடங்களில் மாற்ற முடியுமா என லோகேஷிடம் கேட்டார். அதன்பிறகு விஜய் சொன்ன கரெக்ஷனை லோகேஷ் செய்துவிட்டு ஷூட்டிங் சென்றதாகவும் லலித் குமார் தெரிவித்துள்ளார்.
முக்கியமாக மார்க்கெட் ஃபைட் சீன் தரமாக இருந்தது. அதனால் அதில் இன்னும் கொஞ்சம் இருக்கலாம் என விஜய் கூறினார். அதன்பின்னர் லோகேஷ் அந்த இடத்தில் இன்னும் கொஞ்சம் காட்சிகளை சேர்த்தார். இப்படி பல இடங்களில் விஜய்யுடன் நடந்த ஆலோசனையில் அவர் சொன்னபடி தான் லியோ ஸ்க்ரிப்ட் மாற்றப்பட்டதாக லலித் குமார் கூறியுள்ளார். தற்போது இதுதான் லியோ தோல்விக்கு காரணம் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகினனர்.


Click it and Unblock the Notifications











