Leo: "சிரமத்திற்கு மன்னிக்கவும்..” லியோ ஆடியோ லான்ச் கேன்சல்... போலீஸாருக்கு கடிதம் எழுதிய படக்குழு!
சென்னை: லியோ ஆடியோ லன்ச் கேன்சல் செய்யப்பட்டதாக தயாரிப்புத் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள், மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில், லியோ இசை வெளியீட்டு விழா கேன்சல் செய்யப்பட்டதற்காக படக்குழுவினர் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியுள்ளனர். லியோ படக்குழு சார்பில் போலீஸாருக்கு எழுதப்பட்ட இந்த கடிதம் வைரலாகி வருகிறது.

போலீஸாருக்கு மன்னிப்புக் கடிதம் : லியோ திரைப்படம் அறிவிக்கப்பட்டது முதலே விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன்ஸ் த்யாரித்துள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் செகண்ட் சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ளது. முன்னதாக லியோ ஆடியோ லான்ச் வரும் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், திடீரென கேன்சல் செய்யப்பட்டதாக படக்குழு அறிவித்தது. இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர். அதிகளவில் என்ட்ரி பாஸ் கேட்டு கோரிக்கை வருவதால், பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடிகள் ஏற்படலாம் என ஆடியோ லான்ச் ரத்து செய்யப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.
ஆனால், விஜய் ரசிகர்களோ லியோ ஆடியோ லான்ச் கேன்சலாக அரசியல் அழுத்தம் தான் காரணம் என பகிரங்கமாக குற்றம்சாட்டினர். மேலும், விஜய்க்கு ஆதரவாக டிவிட்டரில் கருத்துத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், லியோ படக்குழுவினரின் கடிதம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. பெரியமேடு காவல் நிலையத்துக்கு லியோ படக்குழுவினரால் எழுதப்பட்ட இந்த கடிதத்தில், போலீஸாரிடம் மன்னிப்புக் கேட்கப்பட்டுள்ளது.

அதாவது, "செப்டம்பர் 30ம் தேதி லியோ இசை வெளியீட்டு விழாவுக்காக பாதுகாப்புக் கேட்டு இருந்தோம். நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்த இந்த நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டதால் போலீஸ் பாதுகாப்பு வேண்டாம். சிரமத்திற்கு மன்னிக்கவும்" என குறிப்பிட்டுள்ளது. இந்த கடிதம் விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அதேநேரம் லியோ இசை வெளியீட்டு விழா கேன்சலாக அரசியல் அழுத்தம் காரணமில்லை என்றும் சொல்லப்படுகிறது.
லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான பாஸ்கள், போலியாக அச்சடிக்கப்பட்டு பிளாக்கில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாம். இதனால், 60,000 ரசிகர்கள் வரை லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு வரலாம் என தகவல்கள் சென்றுள்ளன. இதன் காரணமாகவே ஆடியோ லான்ச்சை கேன்சல் செய்துவிடலாம் என லியோ படக்குழு முடிவு செய்துள்ளதாம்.


Click it and Unblock the Notifications











