Leo: லியோவில் கெட்ட வார்த்தை... “விஜய்யை நான் தான் Force பண்ணேன்..”: லோகேஷின் அடடே விளக்கம்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியானது.
இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது.
விஜய் போன்ற மாஸ் ஹீரோக்கள் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதா என விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், லியோவில் விஜய் கெட்ட வார்த்தை பேசியதற்கு நானே காரணம் என லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

விஜய்யை நான் தான் Force பண்ணேன்: லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதநேரம், இந்த ட்ரெய்லரில் பெண்களை இழிவுப்படுத்தும் வகையில் விஜய் கெட்டவார்த்தை பேசி நடித்திருந்தார். விஜய் போன்ற முன்னணி நடிகர்களும் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா என கடும் விமர்சனங்கள் எழுந்தன. விஜய் சில வருடங்களாகவே சமூகப் பணிகள், அரசியல் என தனது ரூட்டை மாற்றியுள்ளார்.
இந்த மாதிரியான சூழலில், விஜய் கெட்ட வார்த்தை பேசி நடிப்பது, இளைஞர்களையும் அவரது ரசிகர்களையும் பாதிக்கும் என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இந்த சம்பவம் கடும் சர்ச்சையான நிலையில், இதுவரை விஜய் தரப்பில் இருந்து எந்தவிதமான விளக்கங்களும் கொடுக்கப்படவில்லை. இதனையடுத்து இந்த சர்ச்சைகள் குறித்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.
லியோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பிரபல யூடியூப் தளத்துக்கு பேட்டி கொடுத்திருந்தார் லோகேஷ். அப்போது லியோ ட்ரெய்லரில் இடம்பெற்ற கெட்ட வார்த்தை பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ், இந்த சம்பவத்துக்கும் விஜய்ண்ணாவுக்கும் சம்பந்தம் இல்லை எனக் கூறியுள்ளார். அதாவது இந்த வசனம் பற்றி விஜய்யிடம் சொன்னதும் அவர் முதலில் தயங்கினார்.
குறிப்பிட்ட அந்த காட்சி ஷூட்டிங் செய்யும் போது, "இந்த வார்த்தை ஓகேவா... நான் சொல்லலாமா..." என விஜய் என்னிடம் கேட்டார். அதன்பிறகு நான் தான் விஜய்யை ரொம்ப கட்டாயப்படுத்தி அந்த வார்த்தையை பேசவைத்தேன் என லோகேஷ் கூறியுள்ளார். "இந்த வார்த்தை கோபத்தின் வெளிப்பாடு தான், அதனால் கதைக்கு இது ரொம்பவே தேவை" என சொன்ன பிறகே விஜய் அப்படி பேசினார் என லோகேஷ் விவரித்துள்ளார்.
மேலும், விஜய் அப்படி கெட்ட வார்த்தை பேசியது யாருடைய மனதையும் கஷ்டப்படுத்தியிருந்தால் அதற்கு நான் பொறுப்பேற்றுக்கொண்டு மன்னிப்புக் கேட்பதாக லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். லோகேஷின் இந்த விளக்கம் விஜய் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், சமூக ஆர்வலர்கள் இது தவறான முன்னுதாரணம் என மீண்டும் விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











