Leo: “எமோஷனலான விஜய்... பேக்கப் சொன்ன லோகேஷ்... அவரே அழுதுட்டார்..”: லியோ ஸ்பாட்டில் கண்ணீர் கதை

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் 5ம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து லியோ மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் எமோஷனலானதால், லோகேஷ் பேக்கப் சொன்ன சம்பவம் பற்றி தகவல் வெளியானது.

 Leo: Lokesh Kanagaraj cried for Vijays emotional scene in Leo

லியோ ஸ்பாட்டில் எமோஷனலான விஜய்: விஜய் - லோகேஷ் காம்போவில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணியில் உருவாகியுள்ள இரண்டாவது படம் லியோ என்பது குறிப்பிடத்தக்கது. விஜய், லோகேஷ், அனிருத், லலித் குமார் காம்போ, லியோவிலும் மாஸ் காட்டும் என ரசிகர்கள் அதிகம் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் லியோ படத்தின் ட்ரெய்லர் கடந்த 5ம் தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக இன்று லியோ மூன்றாவது பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குடும்ப பாடலாக இருக்கும் என தயாரிப்பாளர் லலித் குமார் ஏற்கனவே அப்டேட் கொடுத்திருந்தார். அதனால் கொஞ்சம் சென்டிமெண்ட் வகையில் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், லியோவில் மொத்தம் 5 பாடல்கள் என லோகேஷ் கனகராஜ்ஜும் அப்டேட் கொடுத்திருந்தார்.

இதனிடையே, லியோ ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை சர்ச்சையானது. ஆனால், அது அந்தக் காட்சிக்கு தேவையென்பதால் நான் தான் கட்டாயப்படுத்தி பேச சொன்னதாக லோகேஷ் தெரிவித்திருந்தார். மேலும், அந்த சீன் ரொம்பவே எமோஷனலாக இருக்கும் எனவும் அவர் கூறியிருந்தார். அதுபற்றி தற்போது லியோ அசோசியேட் டைரக்டரும் லோகேஷின் நெருங்கிய நண்பருமான ரத்னகுமாரும் அப்டேட் கொடுத்துள்ளார்.

அதாவது லியோவில் 6 நிமிடங்களுக்கு ஒரு சிங்கிள் ஷாட் சீன் இருப்பதாகவும், அப்போது தான் அந்த கெட்ட வார்த்தை பேசும் வசனம் இடம்பெறும் என்பதை ஓபன் செய்துவிட்டார். ஆனால், அந்த சீன் ஷூட்டிங் செய்தபோது மொத்த ஸ்பாட்டும் அப்படியே உறைந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். விஜய் அப்படி எமோஷனலாக நடித்ததை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது. அந்த சீன் ஷூட் செய்து முடித்ததும் லோகேஷ் உடனே பேக்கப் சொல்லிவிட்டாராம்.

அன்றைய தினத்தில் இன்னும் 4 மணி நேரம் ஷூட்டிங் செய்ய வேண்டியிருந்தும், லோகேஷால் அதற்குமேல் முடியாமல் பேக்கப் சொல்லியதாக ரத்னகுமார் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் விஜய் எமோஷனலாக நடித்த சிங்கிள் ஷாட் காட்சியை, தயாரிப்பாளர் லலித் குமாருக்கு போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ். அதில் விஜய்யின் நடிப்பைப் பார்த்த லலித், அங்கேயே அழுதுவிட்டாராம். இந்த சீன் விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் ரத்னகுமார் விவரித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X