Leo: "இருக்கு ஆனா இல்ல..” லியோ LCU பஞ்சாயத்துக்கு லோகேஷ் கொடுத்த விளக்கம்... ரசிகர்கள் குழப்பம்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.
இந்தப் படத்திற்கான அட்வான்ஸ் புக்கிங் தமிழ்நாட்டில் வரும் 14ம் தேதி முதல் தொடங்கும் எனத் தெரிகிறது.
இதனிடையே லியோ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் லோகேஷ் கனகராஜ் பங்கேற்று பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் லியோ LCU இல் உருவாகியுள்ளதா இல்லையா என்பதை பற்றியும் அவர் விளக்கமளித்துள்ளார்.
லியோ LCU பஞ்சாயத்துக்கு லோகேஷ் விளக்கம்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து சென்சார், ரன்னிங் டைம் பற்றிய அப்டேட்களும் வெளியாகி வருகின்றன. அதேநேரம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோரும் லியோ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
அப்போது அவர்கள் லியோ படத்தில் இடம்பெற்றுள்ள பல சுவாரஸ்யங்கள் குறித்து பேசி வருகின்றனர். இதில் பலரது எதிர்பார்ப்பும் லியோ லோகேஷின் LCU-ல் உருவாகியுள்ளதா என்பது தான். ரசிகர்கள் உட்பட சினிமா விமர்சகர்களும் லியோ LCU-ல் இருக்கும் என அதிகம் எதிர்பார்த்துள்ளனர். ஆனால், கடந்த வாரம் லியோ ட்ரெய்லரில் அதற்கான லீட் எதுவும் இடம்பெறவில்லை. அதேபோல் போஸ்டர் உட்பட எதிலும் LCU டச் தெரியவில்லை.
இந்நிலையில் லியோ ப்ரோமோஷன் பேட்டியில் பேசிய லோகேஷிடம், LCU பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்துள்ள லோகேஷ், "ரொம்ப சின்னதா எதாவது பண்ணிட்டு LCU-ன்னு சொல்லிட்டா, ரசிகர்களுக்கு திருப்தி இல்லாம போக வாய்ப்பிருக்கு. LCU படமா இல்லாம வேற எதோ இருக்கேன்னு ரசிகர்கள் ஏமாந்துருவாங்க. அதனால தான் இதுவரை அதபத்தி எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை" என்றுள்ளார் லோகேஷ்.
மேலும், "இதுவரை இரண்டு படங்கள் தான் லோகேஷ் யுனிவர்ஸில் வந்துள்ளன. கைதி, விக்ரம் தவிர மூன்றாவதாக எந்தப் படமும் வரவில்லை. LCU கான்செப்ட்டில் மொத்தம் 4 அல்லது 5 படங்கள் வெளியாகி, அது உறுதியாக இருந்தால் மட்டுமே நாம் தைரியமாக அறிவிக்க முடியும். இப்போதைக்கு LCU ஆரம்பம் மட்டுமே, அதனால் அதனை கெடுக்காமல் இருப்பதே சிறப்பானது" எனக் கூறியுள்ளார்.

லோகேஷின் இந்த பதிலால் லியோ LCU இல் இருக்குமா இல்லையா என்பது இன்னும் குழப்பமாகவே உள்ளது. முன்னதாக அசோசியேட் இயக்குநர் ரத்னகுமார் பேசிய போது, லியோ LCU-ல் இருக்கும் என லீட் கொடுத்திருந்தார். அதேபோல் தயாரிப்பாளர் லலித் குமாரும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் இருக்கும் என்றே கூறினாரே தவிர, லியோ LCU தான் உறுதியாக கூறவில்லை.


Click it and Unblock the Notifications











