Leo: “விஜய் ஓக்கே சொன்னா லியோ 2... ஆனாலும் அது அவ்ளோ ஈஸி இல்ல..” லோகேஷ் சொன்ன சஸ்பென்ஸ்

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது.

ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, மிகப் பெரிய வெற்றிப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், லியோ செகண்ட் பார்ட் பற்றி லோகேஷ் கனகராஜ் சஸ்பென்ஸ் அப்டேட் கொடுத்துள்ளார்.

விஜய் ஓக்கே சொன்னா லியோ 2
மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்துள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளது. விஜய்யின் கேரியரில் லியோவுக்கு இருக்கும் எதிர்பார்ப்பு இதுவரை வேறு எந்த படத்துக்கும் இருந்தது கிடையாது எனலாம்.

 Leo: Lokesh Kanagaraj update on Leo second part

இந்நிலையில், கடந்த வாரம் நடைபெறவிருந்த லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனது. இதனையடுத்து கடந்த 5ம் தேதி லியோ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது. இந்த ட்ரெய்லருக்கு விஜய் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால், அதிகமான வன்முறை காட்சிகள், விஜய் பேசிய கெட்ட வார்த்தை ஆகியவை விமர்சனத்துக்கு உள்ளாகின.

இந்த சர்ச்சைகளை கடந்தும் லியோ சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இன்னொரு பக்கம் லியோ ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளுக்காக யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அப்போது லியோ உட்பட விக்ரம், தலைவர் 171 என தான் இயக்கிய, இயக்கவுள்ள படங்கள் குறித்து மனம் திறந்தார். முக்கியமாக லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ், கைதி 2, விக்ரம் 2 படங்கள் பற்றியும் அப்டேட் கொடுத்தார்.

அப்போது லியோ இரண்டு பாகங்களாக வெளியாகுமா அல்லது ஒரே பாகம் தானா என கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்துள்ள லோகேஷ், லியோ 2ம் பாகம் வர வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளார். லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்பதை படம் பார்க்கும் போது ரசிகர்கள் தெரிந்துகொள்வார்கள். ஆனால், லியோ 2ம் பாகத்துக்கு லீட் இருப்பதாகக் கூறியுள்ளார்.

லியோ வெளியானதும் தலைவர் 171, கைதி 2, விக்ரம் 2 படங்களை முடித்த பின்னர் தான் லியோ 2ம் பாகம் பற்றி யோசிக்க முடியும். அப்போதும் விஜய்ண்ணா ஓக்கே சொன்னால் தான் லியோ 2 உருவாகும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். மேலும், லியோவில் ரசிகர்களுக்கு ஏராளமான சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X