Leo: “லியோ டைட்டில் ஃபர்ஸ்ட் இதுதான்..” சஞ்சய் தத் கேரக்டரில் இருக்கும் ட்விஸ்ட்... லோகேஷ் அப்டேட்

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரஸ்யங்களை கூறியுள்ளார்.

மேலும், லியோ படம் முதலில் வேறொரு டைட்டிலில் உருவாகவிருந்தது குறித்தும் மனம் திறந்துள்ளார்.

அதேபோல், சஞ்சய் தத்தின் கேரக்டரில் உள்ள சஸ்பென்ஸும் பற்றியும் லோகேஷ் விளக்கம் கொடுத்துள்ளார்.

லியோ டைட்டில் ஃபர்ஸ்ட் இதுதான்
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே இருக்கிறது. முதல் இரண்டு பாடல்களைத் தொடர்ந்து லியோ ட்ரெய்லரும் வெளியாகிவிட்டது. இதனைப் பார்த்த ரசிகர்களோ இதுதான் லியோ கதையாக இருக்கும் என விதவிதமாக உருட்டி வருகின்றனர். இன்னொரு பக்கம் லியோ லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்குமா இல்லையா என கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படம் பற்றிய பல சுவாரஸ்யங்களை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டிகளில் கூறியுள்ளார். மாஸ்டர் படப்பிடிப்பில் விஜய்க்கு சீன் பேப்பர் கொடுக்காமலேயே படம் எடுத்துவிட்டேன். அப்போதே அவர் அடுத்தப் படத்தில் இப்படிலாம் பண்ணிடாத என அன்புக் கட்டளையிட்டார். அதனால், லியோவில் சீன் பேப்பர் கொடுத்த பின்னரே விஜய் ஷூட்டிங் ஸ்பாட் வந்தார் என ஜாலியாக ஷேர் செய்தார்.

 Leo: Lokesh updated that Leo movie was originally titled Antony

அதேபோல், விஜய்ண்ணாவுக்கும் தனக்கும் மோதல் என செய்திகள் வெளியானதைப் பார்த்து, இருவருமே சிரித்துக் கொண்டோம் எனக் கூறியுள்ளார். முக்கியமாக லியோ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட டைட்டில் வேறு என்றும் லோகேஷ் சீக்ரெட்டான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, முதலில் ஆண்டனி என்ற டைட்டில் தான் இந்தப் படத்திற்காக முடிவு செய்து வைத்திருந்ததாகவும், ஷூட்டிங் தொடங்கும் போது தான் லியோ என மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் ஆண்டனியை விட்டுவிடக் கூடாது என, சஞ்சய் தத் கேரக்டருக்கு அந்த பெயரை வைத்துவிட்டதாகவும் லோகேஷ் பகிர்ந்துள்ளார். இதனால், சஞ்சய் தத்தின் ஆண்டனி கேரக்டரில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், சஞ்சய் தத் எப்போதும் தன்னை 'அப்பா' என அழைக்க வேண்டும் என உரிமையோடு கூறியதாகவும், இரண்டு நாட்கள் பேசவில்லை என்றாலும் அவரே போன் செய்து 'என்ன பேசமாட்டியா' என ஜாலியாக மிரட்டுவதாகவும் லோகேஷ் கூறியுள்ளார்.

ஆண்டனியாக உருவாகவிருந்த தளபதி 67, தற்போது லியோ டைட்டிலில் மாஸ் காட்டவுள்ளது. அதேநேரம் இந்தப்படம் கண்டிப்பாக லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இருக்கும் என்றே இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே லியோவுக்கு அதிகாலை FDFS காட்சிக்கு அனுமதி கிடைக்கவில்லை என்பதால், ஒருநாள் முன்னதாக மாலை, இரவு நேர காட்சிகள் திரையிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X