Leo: "லியோ சக்சஸ் பார்ட்டி ஓவர்... ஆனாலும் தொடரும் சம்பள பிரச்சினை..” உதவி இயக்குநர்கள் புலம்பல்
சென்னை: விஜய் நடித்த லியோ திரைப்படம் அக்டோபரில் வெளியாகியிருந்தது.
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

அதேபோல், பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், லியோ படத்தில் வேலைப் பார்த்த லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக புதிய பிரச்சினை கிளம்பியுள்ளது.
மீண்டும் சம்பள பிரச்சினையில் சிக்கிய லியோ
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவான லியோ திரைப்படம் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியானது. லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரித்த இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது.
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோவுக்கு முதல் நாளில் தரமான ஓபனிங் கிடைத்தது. அதன்படி லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் 148 கோடி என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனங்கள், ட்ரோல்களால் அடுத்தடுத்த நாட்களில் லியோவின் வசூல் தடுமாறத் தொடங்கியது. இதனால் ஆயிரம் கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட லியோ, 600 கோடி வரை மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளதாகத் தெரிகிறது.
இதெல்லாம் ஒருபக்கம் இருந்தாலும் லியோ படத்தால் தயாரிப்பாளருக்கு 100 கோடி ரூபாய் வரை லாபம் என்றே சொல்லப்படுகிறது. அதேநேரம் லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், சக்சஸ் மீட்டிங்கை பிரம்மாண்டமாக நடத்தியது படக்குழு. நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற லியோ சக்சஸ் மீட்டில், விஜய்யின் குட்டி ஸ்டோரியும் ரசிகர்களின் கவனம் ஈர்த்தது.
அதேபோல், லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குநர்களை மேடைக்கு வரவைத்து அவர்களை பெருமைப்படுத்தினார். இதேபோல் விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதும் லோகேஷ் நடந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் லியோவில் வேலைப் பார்த்த லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு சம்பள பிரச்சினை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, லியோ வெளியாவதற்கு முந்தைய மாதமான செப்டம்பரில், லோகேஷின் உதவி இயக்குநர்கள் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாக இருந்தனர். ஆனால், அந்த மாதத்திற்கான சம்பளத்தை தயாரிப்பு நிறுவனம் இன்னும் வழங்கவில்லையாம். இதனால் லோகேஷ் கனகராஜ்ஜின் உதவி இயக்குநர்கள் புலம்பி வருவதாக சொல்லப்படுகிறது.
ஏற்கனவே லியோ படத்தில் இடம்பெற்ற 'நான் ரெடி' பாடலில் நடனம் ஆடியவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என சர்ச்சையானது. 2000 குரூப் டான்ஸர்ஸுடன் பிரம்மாண்டமாக உருவான இந்தப் பாடலில், யூனியன் டான்ஸர்களைத் தவிர மற்றவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என புகார் எழுந்தது. அதன்பின்னர் இந்த பஞ்சாயத்து முடிவுக்கு வந்த நிலையில், தற்போது உதவி இயக்குநர்கள் தங்களுக்கு சம்பள பாக்கி இருப்பதாக சொல்லி நொந்து நூடுல்ஸ் ஆகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











