Leo: “விஜய் மாறவே இல்ல... லியோ பார்த்துட்டு அதபத்தி பேசுங்க..”: சம்பவம் செய்த மன்சூர் அலிகான்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
லோகேஷின் ஆல்டைம் ஃபேவரைட்டான மன்சூர் அலிகானும் இதில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார்.
இந்நிலையில், லியோ படம் பற்றியும் விஜய்யுடன் நடித்தது குறித்தும் மன்சூர் அலிகான் பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் மாறவே இல்லை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதோடு, லியோ LCU கான்செப்ட்டில் உருவாகி வருவதும் ஹைப் கொடுத்துள்ளது. இதனால், லியோ இண்டஸ்ட்ரி ஹிட் கொடுக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், லியோ திரைப்படம் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசியது வைரலாகி வருகிறது. லோகேஷின் ஆல்டைம் ஃபேவரைட் நடிகர்களில் மன்சூர் அலிகான் முக்கியமானவர். அதனால் லியோ படத்தில் அவரையும் முக்கியமான கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார் லோகேஷ். படம் முழுக்க விஜய்யுடன் வருவதாக மன்சூர் அலிகானின் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்தப் படத்திற்காக தனது டப்பிங் வேலைகளை முடித்துவிட்டார் மன்சூர் அலிகான்.
பிரபல யூடியூப் தளத்திற்கு பேட்டிக் கொடுத்த மன்சூர் அலிகான், லியோ படத்தில் தனது போர்ஷன் முழுவதும் முடிந்துவிட்டதாகக் கூறியுள்ளார். அதன்பின்னர் விஜய் குறித்து பேசியுள்ள அவர், விஜய்யின் வெற்றிக்கு அவரது அப்பா எஸ்ஏ சந்திரசேகர் தான் காரணம். அவரால் தான் விஜய் இப்படி டாப் ஹீரோவாக வர முடிந்தது எனக் கூறியுள்ளார். ஆனாலும் விஜய் தனது கேரக்டரை கொஞ்சம் கூட மாற்றிக்கொள்ளவே இல்லை எனவும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு படத்தில் அவருடன் ஒரு காட்சியில் நடித்துள்ளேன். அப்போது பார்த்த அதே விஜய்யை தான் இப்போதும் லியோவில் பார்க்கிறேன். விஜய் கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே இருப்பதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். அதேபோல், லியோ படப்பிடிப்பில் லோகேஷ் கனகராஜ்ஜுடன் பேச வாய்ப்பே கிடைக்கவில்லை, ஸ்பாட்டில் எப்போதும் 3000 முதல் 4000 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தனர் என்றுள்ளார்.
முக்கியமாக லியோ படத்தில் புகைப்பிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள் அதிகம் இருப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன. அது எதற்காக என்பது படம் பார்க்கும் போது தான் தெரியும். சினிமாவில் புகைப்பிடிக்கும், மது அருந்தும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்றால், அதனை விற்பனை செய்வதை முதலில் தடை செய்ய வேண்டும் என மன்சூர் அலிகான் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். மேலும், லியோ படத்தில் விஜய்யும் லோகேஷும் கடுமையாக உழைத்துள்ளனர். அதற்கான ரிசல்ட் படத்தில் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











