Leo: “அந்த சீன்ல ஜார்ஜ் மரியானை பார்த்து சிரிப்பு வந்துச்சு..” கலாய்த்துத் தள்ளிய மன்சூர் அலிகான்!
சென்னை: லியோ படத்தின் வெற்றி விழா நேற்று நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதில், விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
லோகேஷின் ஃபேவரைட் நடிகரான மன்சூர் அலிகான் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் லியோவில் நடித்த ஜார்ஜ் மரியான் கேரக்டரை கலாய்த்துத் தள்ளியது ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ஜார்ஜ் மரியானை கலாய்த்த மன்சூர் அலிகான்
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம், கடந்த மாதம் வெளியானது. லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேநேரம் பாக்ஸ் ஆபிஸிலும் எதிர்பார்த்த அளவில் வசூல் இல்லை என சொல்லப்படுகிறது. ஆனால், படக்குழு தரப்பில் இருந்து லியோ வசூல் 550 கோடியை கடந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், ஜார்ஜ் மரியான் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இவர்களில் ஜார்ஜ் மரியான் கேரக்டர் என்ட்ரியான பின்னர் தான் லியோ LCU-ல் கனெக்ட் ஆகும். இதனால், இனிவரும் தனது LCU படங்களில் ஜார்ஜ் மரியானின் நெப்போலியன் கேரக்டர் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில், லியோ வெற்றி விழா நிகழ்ச்சி நேற்று நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் மன்சூர் அலிகான் கலந்துகொண்டார். ஹிருதயராஜ் டிசோசா என்ற கேரக்டரில் நடித்த மன்சூர் அலிகான் தான், விஜய்யின் லியோ ப்ளாஷ்பேக் காட்சிகளை விவரிப்பார். மன்சூர் அலிகான் லோகேஷின் ஃபேவரைட் நடிகர் என்பதால் தான் லியோவில் அவரை நடிக்கவும் வைத்தார்.
ஆனால், லியோவில் தனது கேரக்டரில் எந்த முக்கியத்துவம் இல்லை என தனக்குத் தானே ட்ரோல் செய்த மன்சூர் அலிகான், இப்போது ஜார்ஜ் மரியானையும் வெளுத்து வாங்கியுள்ளார். அதாவது விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்க தமிழ்நாட்டில் இருந்து வரும் போலீஸாக நெப்போலியன் என்ற கேரக்டரில் ஜார்ஜ் மரியான் என்ட்ரி கொடுப்பார். கைதி படத்தில் இதே நெப்போலியன் கேரக்டரில் மாஸ் காட்டியிருப்பார் ஜார்ஜ் மரியான்.

லியோவில் அவரை ட்ரோல் செய்துள்ள மன்சூர் அலிகான், "காஷ்மீர்ல பிரச்சினைன்னு வரும்போது கேப்டன் விஜயகாந்த் மாதிரி யாரோ வருவார்ன்னு நினைச்சேன். ஆனா, இங்க ஜார்ஜ் மரியான் வந்ததும் தியேட்டரே அதிருது. ஆனா எனக்கு ஜார்ஜ் மரியானை பார்த்து சிரிப்பு தான் வந்துச்சு" என லியோ வெற்றி விழா மேடையிலேயே ஓபனாக பேசினார். மன்சூர் அலிகானின் இந்த நக்கலான பேச்சு ரசிகர்களுக்கும் வைப் கொடுத்தது.


Click it and Unblock the Notifications











