Leo: “எங்கிட்ட லியோ அப்டேட் கேட்டா இதுதான் பதில்..” மன்சூர் அலிகானின் Thug Life மொமண்ட்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லியோ ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யுடன் நடித்துள்ள மன்சூர் அலிகானிடம் லியோ அப்டேட் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு மன்சூர் அலிகான் கூறிய நக்கலான பதில், விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

லியோ அப்டேட் கொடுத்த மன்சூர் அலிகான்: விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. முக்கியமாக லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ள லியோ, இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் எனவும் ரசிகர்கள் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இதுவரை விஜய்யின் படங்களுக்கு இந்தளவிற்கு எதிர்பார்ப்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
விஜய்யுடன் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், த்ரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களில் லோகேஷ் கனகராஜ்ஜின் ஃபேவரைட் நடிகர் என்றால் அது மன்சூர் அலிகான் தான். இவரை மனதில் வைத்தே கைதி படத்தின் டெல்லி கேரக்டரை உருவாக்கினாராம் லோகேஷ் கனகராஜ். மன்சூர் அலிகானுடன் ஒரு படத்தில் கண்டிப்பாக இணைவேன் எனக் கூறிய லோகேஷ், லியோவில் விஜய்யுடன் நடிக்க வைத்துவிட்டார்.

இதனால், மன்சூர் அலிகானை ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் லியோ அப்டேட் கேட்டு வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் மன்சூர் அலிகானுக்கு மீண்டும் பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மன்சூர் அலிகானிடம் லியோ அப்டேட் குறித்து கேட்கப்பட்டதற்கு, தரமான தக் லைஃப் மொமண்ட் கொடுத்துள்ளார். அதாவது பிரபலமான யூடியூப் சேனலில் மன்சூர் அலிகான் பேட்டிக் கொடுத்திருந்தார்.
அப்போது அவரிடம், "நீங்கள் செல்லுமிடமெல்லாம் லியோ அப்டேட் கேட்கப்படுகிறதே, அப்படி கேட்பவர்களிடம் என்ன சொல்வீர்கள். லியோ அப்டேட் எதாவது இருந்தால் சொல்ல முடியுமா" என கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கு பதிலளித்துள்ள மன்சூர் அலிகான், "ஆமாம் நான் போற இடமெல்லாம் லியோ அப்டேட் கேக்குறாங்க. அப்படி கேட்டா இதுதான் என் பதில்" என தனது ஸ்டைலில் சிரித்து தக் ஃலைப் மொமண்ட் காட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











