Leo: “லியோவில் விஜய் இன்ட்ரோ சீன் சான்ஸே இல்ல..” லோகேஷ் போட்ட கண்டிஷன்... உளறிய மாஸ்டர் மகேந்திரன்
சென்னை: விஜய்யின் லியோ படத்தில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் எடிட்டிங் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லியோ படத்தில் விஜய்யின் இன்ட்ரோ சீன் குறித்து, மாஸ்டர் மகேந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார்.
மாஸ்டர் படத்தில் ஜூனியர் விஜய் சேதுபதி கேரக்டரில் நடித்திருந்த மகேந்திரன், லோகேஷையும் மீறி லியோ அப்டேட் வெளியிட்டுள்ளார்.

லியோவில் விஜய் இன்ட்ரோ சீன்: தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ தான், கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. இந்தப் படம் பற்றிய அபிஸியல் அப்டேட் வெளியானது முதலே, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. விஜய் - லோகேஷ் கூட்டணி ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டியிருந்தது.
அதுமட்டும் இல்லாமல் லோகேஷும், அவர் கடைசியாக இயக்கிய விக்ரம் படத்தில் தரமான சம்பவம் செய்திருந்தார். இதனால், லியோ படத்திற்கு ரசிகர்கள் மட்டுமில்லாமல், திரையுலகிலும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷின் யுனிவர்ஸில் இணைந்துள்ள லியோ, மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ வெளியாக இன்னும் 25 நாட்களே உள்ளதால், படக்குழு அடுத்தடுத்து அப்டேட்டை வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய் தத், ஆர்ஜுன் ஆகியோரின் க்ளிம்ப்ஸ் வீடியோக்கள் வெளியாகின. அதன் தொடர்ச்சியாக லியோவில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் ஒவ்வொன்றாக வெளியாகின. விரைவில் செகண்ட் சிங்கிள் அப்டேட், லியோ இசை வெளியீட்டு விழா தகவல்கள் வெளியாகவுள்ளன.
இதனிடையே யாரும் எதிர்பாராதவிதமாக லியோவில் இருந்து செம்ம மாஸ்ஸான அப்டேட் வெளியாகியுள்ளது. லோகேஷின் மாஸ்டர் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். ஜூனியர் பவானி கேரக்டரில் மிரட்டிய மாஸ்டர் மகேந்திரன், சமீபத்தில் லோகேஷ் கனகராஜ்ஜை சந்தித்துள்ளார். அப்போது லியோ படத்தின் எடிட்டிங்கில் பிஸியாக இருந்துள்ளார் லோகேஷ்.

அந்நேரம் விஜய்யின் மரண மாஸ் ஸ்டில் ஒன்றை பார்த்துள்ளார் மாஸ்டர் மகேந்திரன். அதுபற்றி அவர் லோகேஷிடம் கேட்க, இதுதான் லியோவில் விஜய் அண்ணாவின் இன்ட்ரோ சீன், நீ பார்க்கிறியா எனக் கேட்டுள்ளார். அதன்பின்னர் மகேந்திரனுக்காக விஜய்யின் 5 நிமிடக் காட்சியை போட்டுக் காட்டினாராம் லோகேஷ். மேலும், இதுபற்றி யாரிடமும் வெளியே சொல்லக் கூடாது எனவும் கண்டிஷன் போட்டுள்ளார்.
விஜய்யின் இன்ட்ரோ சீனை பார்த்த மாஸ்டர் மகேந்திரன், மிரண்டு போய்விட்டாராம். அதுபற்றி அவரே ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது, லோகேஷின் கண்டிஷனை மீறி உளறியுள்ளார். மாஸ்டர் படத்தில் வரும் இன்ட்ரோ சீனை விட, லியோவில் விஜய்ண்ணாவின் என்ட்ரி தாறுமாறாக இருக்கும் எனக் கூறி ரசிகர்களுக்கும் ஹைப் கொடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











