Leo: லியோவில் ஃபஹத் பாசில் கன்ஃபார்ம்... விஜய் மகன் சொன்ன சீக்ரெட் அப்டேட்... அப்போ LCU தானா..?
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இன்னும் 5 நாட்களில் வெளியாகவுள்ளது.
இந்தப் படம் LCU கான்செப்ட்டில் இருக்குமா என லோகேஷ் கனகராஜ் இதுவரை அப்டேட் கொடுக்கவில்லை.
இந்நிலையில் லியோவில் விஜய் மகனாக நடித்துள்ள மேத்யூ தாமஸ், இந்தப் படம் பற்றிய சில தகவல்களை கூறியுள்ளார்.
முக்கியமாக லியோ படத்தில் விஜய்யுடன் ஃபஹத் பாசிலும் நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

லியோவில் ஃபஹத் பாசில் கன்ஃபார்ம்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. அதன்படி இந்தப் படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. மாஸ்டரை தொடர்ந்து விஜய் - லோகேஷ், அனிருத், லலித்குமார் கூட்டணி இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளனர். மேலும், விஜய்யுடன் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
இதனால், லியோவும் லோகேஷின் யுனிவர்ஸில் இணைகிறதா என கேள்வி எழுந்தது. லோகேஷின் முந்தைய படங்களான கைதி, விக்ரம் இரண்டும் LCU படங்களாக வெளியாகின. விக்ரம் ரிலீஸான பின்னரே லோகேஷ் தனது LCU ஐடியாவை தெரிவித்தார். இதனால் விஜய்யின் லியோவும் LCUல் இருக்கும் என ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால், அதுபற்றி இப்போதைக்கு சொல்ல முடியாது என லோகேஷ் கூறிவிட்டார்.
அதேநேரம் லியோவில் செம்ம சர்ப்ரைஸ் இருக்கும் எனவும் படக்குழு தரப்பில் இருந்து சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோவில் ஃபஹத் பாசிலும் நடித்துள்ளது தற்போது தெரியவந்துள்ளது. கமல் - லோகேஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான விக்ரம் படத்தில், அமர் என்ற ஸ்பை ஏஜெண்ட் கேரக்டரில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். அதே கேரக்டரில் தான் லியோவிலும் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

அதாவது லியோ படத்தில் விஜய்யின் மகனாக மேத்யூ தாமஸ் நடித்துள்ளார். மலையாள திரையுலகின் இளம் நடிகர்களில் ஒருவரான மேத்யூ தாமஸ், முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். இவர் லியோ படத்தில் நடித்த அனுபவம் பற்றி பேட்டி கொடுத்துள்ளார். அப்போது பேசிய அவர், லியோவில் விஜய்யுடனும் ஃபஹத் பாசிலுடனும் இணைந்து நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது என தெரிவித்துள்ளார்.
இதனால் லியோவில் ஃபஹத் பாசிலும் நடித்துள்ளது கன்ஃபார்ம் ஆகியுள்ளது. ஆனால், லோகேஷ் லியோ LCU-ல் இல்லை என்பதாக கூறியிருந்தார். ஆனால் மேத்யூ தாமஸ் கொடுத்துள்ள அப்டேட்டால் விஜய் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











