Leo: “லியோ விவகாரத்தில் அரசியல் இல்லை... அரசுக்கு என்ன கிடைக்கப் போகிறது..” ஓய்ந்தது சர்ச்சை!!

ஈரோடு: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.

இந்தப் படத்திற்கு சிறப்புக் காட்சிகள் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது.

 Leo: Minister Saminathan explains that there is no politics in Vijays Leo film issue

முன்னதாக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்ட விவகாரம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், லியோ பட விவகாரத்தில் அரசியல் ஏதும் இல்லை என அமைச்சர் சாமிநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.

லியோ விவகாரத்தில் அரசியல் இல்லை
விஜய்யின் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். லலித் குமாரின் 7 ஸ்க்ரீன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகிறது. லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளதால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதாவது அக். 19 முதல் 24ம் தேதி வரை லியோ படத்தை 5 காட்சிகள் திரையிடலாம் என அரசு அறிவித்துள்ளது.

அதேநேரம் ரிலீஸாகும் 19ம் தேதி மட்டும் கூடுதலாக ஒரு காட்சி திரையிடவும் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. முன்னதாக லியோ இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த மாதம் இறுதியில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக லியோ ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்திருந்தது. இதற்கு எந்த அரசியல் அழுத்தமும் இல்லை எனவும் தயாரிப்புத் தரப்பு விளக்கம் கொடுத்திருந்தது.

லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது கோலிவுட் மட்டுமின்றி தமிழ்நாடு அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனால், லியோ சிறப்புக் காட்சிகளுக்கும் அனுமதி கிடைக்காது என செய்திகள் வெளியாகின. அதாவது விஜய் அரசியலில் களமிறங்க முடிவு செய்துள்ளதால் தான், இப்படி அழுத்தம் கொடுக்கப்படுகிறது என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இப்படியான சூழலில் லியோ சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது குறிப்பிடத்தக்கது. அதேநேரம், தமிழ்நாடு அரசு வெளியிட்ட ஜி.ஓ-வில் விஜய் பெயருக்கு முன்னால் 'தளபதி' என குறிப்பிடப்பட்டிருந்ததும் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், லியோ பட விவகாரம் பற்றி அமைச்சர் சாமிநாதன் விளக்கம் கொடுத்துள்ளார்.

சென்னிமலையில் செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் சாமிநாதன், "விஜய்யின் லியோ பட விவகாரத்தில் அரசியல் எதுவும் இல்லை. லியோ திரைப்படத்துக்கு முட்டுக்கட்டை போடுவதால் அரசுக்கு என்ன கிடைக்கப் போகிறது.? சிறப்புக் காட்சி திரையிட தயாரிப்பு தரப்பில் இருந்து கோரிக்கை வைத்ததால் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது" என்றார். இதனால் விஜய்க்கு அரசியல் அழுத்தம் தரப்படுவதாக எழுந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X