Leo: சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் லியோ டைட்டில் கார்டு... விஜய்க்காக முரட்டு சம்பவம் லோடிங்!
சென்னை: கோலிவுட்டில் விஜய்யின் லியோ ஃபீவர் தான் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம், வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனையடுத்து லியோ ப்ரொமோஷன் வேலைகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், லியோ டைட்டில் கார்டில் வரும் 'தளபதி விஜய்' பெயரில், தரமான முரட்டு சம்பவம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

லியோ டைட்டில் கார்டில் முரட்டு சம்பவம்: விஜய் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, வரும் 19ம் தேதி ரிலீஸாகிறது. பான் இந்தியா படமாக வெளியாகவுள்ள லியோ, 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கான ப்ரோமோஷன் வேலைகளையும் படக்குழு செய்து வருகிறது.
இந்நிலையில், லியோ ட்ரெய்லரை தொடர்ந்து இன்று படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அசோசியேட் ரத்னகுமார் லியோ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அப்போது லியோ படம் பற்றிய பல சுவாரஸ்யங்களையும் அவர்கள் ஷேர் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸில் உருவாகியுள்ளதாக சொல்லப்படும் லியோ, ஐமேக்ஸ் ஸ்க்ரீனில் வெளியாவதும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது. இதனால் மேக்கிங் ப்ளஸ் டெக்னிக்கலாகவும் லியோ செம்ம ட்ரீட்டாக இருக்கும். இதனிடையே லியோவில் டைட்டில் கார்டு கூட ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும் என ரத்னகுமார் தெரிவித்துள்ளார். வழக்கமாக மாஸ் ஹீரோக்களின் படங்களில் டைட்டில் கார்டு முதல் அனைத்துமே ஸ்பெஷலாக இருக்கும்.
ரஜினியின் படங்களில் முதலில் சூப்பர் ஸ்டார் என வரும் டைட்டில், அதன் பிஜிஎம் ஆகியவை இப்போதும் ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுக்கும். அதனையே விஞ்சும் அளவில் லியோ டைட்டில் கார்டை செதுக்கியுள்ளாராம் லோகேஷ். அதுபற்றி பேசியுள்ள ரத்னகுமார், லியோ படத்தை ரசிகர்கள் முதல் சீனில் இருந்தே பார்க்க வேண்டும். ஆரம்பத்தில் 'தளபதி விஜய்' என டைட்டில் கார்டு பார்க்கவே தரமாக இருக்கும்.

'தளபதி விஜய்' பெயருக்காகவே தனியாக ஆள் வைத்து அனிமேஷன் செய்யப்பட்டுள்ளது. அந்த டைட்டில் கார்டுக்காகவே லியோ படத்தை நான் நான்கு முறையாவது பார்ப்பேன். ரசிகர்களே எதிர்பார்க்காத வகையில் தரமான முரட்டு சம்பவமாக லியோ டைட்டில் கார்டு இருக்கும் என ரத்னகுமார் கூறியுள்ளார். இதனால், விஜய் ரசிகர்கள் கடும் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











