காஷ்மீரில் லியோ ஷூட்டிங் நடக்குதா.. இல்லை ஜாலி டூர் போயிருக்காங்களா.. படகு சவாரி செய்த த்ரிஷா!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஷூட்டிங் ஸ்பாட் என்றாலே அது ஒரு விதமான ஜாலியான ஸ்பாட்டாகத் தான் இருக்கும் என நடிகர்கள் தெரிவித்து வந்த நிலையில், ரசிகர்களும் அதை உணர ஆரம்பித்துள்ளனர்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எந்தவொரு போட்டோக்களும் கசிந்து விடக் கூடாது என சில இயக்குநர்கள் ஸ்ட்ரிக்ட்டாக எங்கே ஷூட்டிங் நடக்குதுன்னே தெரியாமல் ரகசியம் காத்து வரும் வேளையில், ஷூட்டிங் ஸ்பாட்டையே ஜாலி டூர் செய்யும் இடமாக தேர்வு செய்தது மட்டுமின்றி நடிகர்களையும் ஃப்ரீயாகவே போட்டோ, வீடியோன்னு எடுத்து போட்டுக் கொள்ள விட்டு விட்டார் லோகேஷ் கனகராஜ்.

நடிகை த்ரிஷா தொடர்ந்து காஷ்மீரில் எடுத்துக் கொண்ட போட்டோக்களை போட்டு வரும் நிலையில், தற்போது தால் ஏரியில் படகு சவாரி செய்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஜாலியா லியோ ஷூட்டிங்

ஜாலியா லியோ ஷூட்டிங்

லியோ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததில் இருந்தே செம ஜாலியாக படக்குழுவினர் விமானம் மூலமாக காஷ்மீருக்கு பறந்த சென்ற வீடியோவையே வெளியிட்டு இருந்தனர். தொடர்ந்து நடிகர் விஜய், த்ரிஷா, ரத்னகுமார், லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன் என பலரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாகவே வெளியாகி வருகின்றன.

த்ரிஷா செம ஹேப்பி

த்ரிஷா செம ஹேப்பி

14 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் விஜய் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததில் இருந்தே நடிகை த்ரிஷா செம ஹேப்பியாகி உள்ளார். காஷ்மீருக்கு படப்பிடிப்புக்கு சென்ற நிலையில், தொடர்ந்து தனது தோழிகளுடனும், படக்குழுவுடனும் சுற்றுலா செய்து வரும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

மகா சிவராத்திரி பூஜை

மகா சிவராத்திரி பூஜை

கடந்த பிப்ரவரி 18ம் தேதி மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு காஷ்மீரில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்ற நடிகை த்ரிஷா அங்கே சிவ லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்த வீடியோவையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். மேலும், காஷ்மீர் பனிப்பொழிவில் விளையாடும் சில புகைப்படங்களையும் ஷேர் செய்திருந்தார்.

படகு சவாரி

படகு சவாரி

இந்நிலையில், காஷ்மீருக்கு சுற்றுலா செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமான தால் ஏரிக்கு சென்ற நடிகை த்ரிஷா அங்கே படகு சவாரி செய்த லேட்டஸ்ட் புகைப்படமும் சமூக வலைதளங்களில் தற்போது தீயாக பரவி வருகிறது. த்ரிஷாவின் புகைப்படத்தை ஷேர் செய்து ஏகப்பட்ட ரசிகர்கள் இவங்க எல்லாம் லியோ ஷூட்டிங்கிற்கு சென்றார்களா? இல்லை பிக்னிக் சென்றுள்ளனரா என கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

செம குளிர்

செம குளிர்

காஷ்மீரில் சீசன் களைகட்டி உள்ள நிலையில், தால் ஏரியே பனி சூழ்ந்து காணப்படுகிறது. சூடான மசாலா டீயை தனது லியோ படத்தின் குழுவினருடன் இணைந்து நடிகை த்ரிஷா தால் ஏரியில் பருகியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொன்னியின் செல்வன் 2

பொன்னியின் செல்வன் 2

காஷ்மீர் ஷூட்டிங்கில் பிசியாக உள்ள நடிகை த்ரிஷா சீக்கிரமே சென்னை திரும்பியதும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 28ம் தேதி மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா நடித்துள்ள பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்த வெளியாக காத்திருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X