Leo movie: லிப்லாக் சீன்.. சந்தோஷத்தில் பேக்அப் சொன்ன லோகேஷ் கனகராஜ்!
சென்னை: விஜய் -த்ரிஷா லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் லியோ.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் சர்வதேச அளவில் இந்தப் படத்தின் வசூல் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவுடன் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகிறது லியோ படம்.
விஜய்யின் லியோ படம்: விஜய் மற்றும் த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள படம் லியோ. இந்தப் படம் கடந்த 19ம் தேதி சர்வதேச அளவில் ரிலீசாகி மாஸ் காட்டி வருகிறது. தமிழகத்தில் மட்டுமில்லாமல் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களிலும் வசூலில் சாதனை படைத்து வருகிறது. மேலும் வெளிநாடுகளிலும் வசூல் சாதனை படைத்து வருகிறது. படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவத்தை கொடுத்து வருகிறது.
கலவையான விமர்சனங்கள்: இந்தப் படத்தின் இரண்டாவது பாதி சரியான திரைக்கதையுடன் உருவாகவில்லை என்று விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் லோகேஷ் கனகராஜூம் இதை ஒப்புக் கொண்டுள்ளார். நேற்றைய தினம் கார்த்தியின் ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பேசிய லோகேஷ் கனகராஜ், படத்தின் இரண்டாவது பாதி லேக் தான் என்பதை தான் ஒப்புக் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதை தான் கருத்தில் எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
லிப்லாக் காட்சி: இந்தப் படத்தின் இரண்டாவது பாதியை சுவாரஸ்யமாக்கும் வகையில் விஜய் மற்றும் த்ரிஷா இடையிலான லிப்லாக் காட்சி இடம் பெற்றிருந்தது. உண்மையாகவே இருந்தாலும் தன்னுடைய மனைவி தன்னை சந்தேகப்படுவதை ஏற்க முடியாத கணவனின் தவிப்பை இந்தக் காட்சியில் விஜய் நன்றாக செய்திருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இதைதொடர்ந்து வரும் முத்தக்காட்சி முக்கியத்துவம் பெற்றதாக அமைந்துள்ளது.
லோகேஷ் ரியாக்ஷன்: இந்நிலையில் இந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்தும் இந்தக் காட்சி குறித்த லோகேஷின் ரியாக்ஷன் குறித்தும் படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா தனது சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார். இந்தக் காட்சி வழக்கமான காட்சியாக இருக்கக்கூடாது என்பதற்காக silhouette frameஆக எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இந்தக் காட்சியை லோகேஷ் மிகவும் என்ஜாய் செய்ததாகவும் மானிட்டரை பார்த்துவிட்டு பயங்கரமாக இருக்கிறது என்று கூறியதாகவும் மனோஜ் பரமஹம்சா கூறியுள்ளார்.
பேக்அப் சொன்ன லோகேஷ்: மேலும் இந்த ஷாட்டை கட் செய்யாமல் அப்படியே வைக்கலாம் என்று கூறிய லோகேஷ் கனகராஜ், இந்த ஷாட் எடுக்கப்பட்ட சந்தோஷத்தில் கட் சொல்ல வேண்டிய அவர் பேக்அப் என்று கூறியதாகவும் மனோஜ் பரமஹம்சா தெரிவித்துள்ளார். இந்த ஷாட்டை 6 நிமிடத்திலேயே முடித்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். 14 ஆண்டுகளுக்கு பிறகு லியோ படத்தில் விஜய் -த்ரிஷா ஜோடி இணைந்துள்ள நிலையில், அவர்களின் இந்த கெமிஸ்ட்ரி படத்திற்கு சிறப்பாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











