காஷ்மீரில் விஜய்க்கு ஷாக் கொடுத்த லியோ படத்தின் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் சூட்டிங் காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடுமையான குளிருக்கிடையில் நடைபெற்று வருகிறது.
படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ள நிலையில், அவரது தாய் கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார்.
இதையடுத்து லியோ படத்தின் சூட்டிங் அன்றைய தினம் ரத்தானது. தொடர்ந்து மனோஜ் பரமஹம்சாவின் அசிஸ்டண்ட்களை வைத்து படத்தின் சூட்டிங்கை லோகேஷ் திட்டமிட்டிருந்தார்.

விஜய்யின் லியோ படம்
நடிகர் விஜய், த்ரிஷா, கௌதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத், பிரியா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. இந்தப் படத்தின் டைட்டில், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர், நடிகைகள் ஆகியோர் குறித்த அப்டேட்களை அடுத்தடுத்து இந்த மாத துவக்கத்தில் தயாரிப்புத் தரப்பு வெளியிட்டது.

காஷ்மீரில் சூட்டிங்
தொடர்ந்து தனி விமானம் மூலம் விஜய், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் காஷ்மீரில் சூட்டிங் நடத்த கிளம்பி சென்றனர். அங்கு சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 60 நாட்கள் அங்கு சூட்டிங்கை நடத்தி முடிக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளார்.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா
லியோ படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா இணைந்துள்ளார். இதனிடையே கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது அம்மா சென்னையில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையடுத்து தாயின் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்ள அவர் சென்னை திரும்பிய நிலையில், அன்றைய தினம் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

மனோஜ் தாய் மரணம்
இதையடுத்து மனோஜ் பரமஹம்சாவின் அசிஸ்டண்ட்களை வைத்து சில தினங்களுக்கு சூட்டிங்கை நடத்த லோகேஷ் திட்டமிட்டிருந்தார். அப்படி ஒரு நாள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க சென்னை வந்திருந்த மனோஜ் பரமஹம்சா இரு தினங்களிலேயே காஷ்மீருக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

விஜய்க்கு ஷாக் கொடுத்த மனோஜ்
இரு தினங்களிலேயே மனோஜ் மீண்டும் காஷ்மீர் திரும்பியதை பார்த்து சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் ஷாக்காகியுள்ளார். ஏன் இவ்வளவு அவசரமாக திரும்பினார் என்று விஜய் கேட்க, தான் செய்து முடிக்க வேண்டிய இறுதி சடங்குகளை செய்துவிட்டதாக மனோஜ் பதிலளித்துள்ளாராம். இதனால் மனோஜின் டெடிகேஷனை பார்த்து விஜய் மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரும் நெகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

அடுத்தடுத்த வெற்றிப் படங்கள்
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் உருவான ஈரம் படத்தின்மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமானவர் மனோஜ் பரமஹம்சா. இவர் தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன், ராதே ஷ்யாம், பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். விக்ரம் -கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகி நீண்ட நாட்களாக ரிலீசாகாமல் உள்ள துருவ நட்சத்திரம் படத்திற்கும் இவர்தான் ஒளிப்பதிவாளர்.


Click it and Unblock the Notifications











