பஞ்சாயத்து உள்ள இடத்துக்கு பறக்கிறதா லியோ படக்குழு?.. வெளியான தகவல்
சென்னை: காஷ்மீரில் நடைபெற்றுவரும் லியோ படத்தின் ஷூட்டிங் இந்த வாரத்துக்குள் முடிவடைய இருப்பதாக கூறப்படுகிறது.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். லலித்குமார் தயாரித்துவரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். படமானது அக்டோபர் ரிலீஸ் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

காஷ்மீருக்கு பறந்த லியோ படக்குழு
லியோ படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், மிஷ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறது. இதில் மிஷ்கின், கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்டோருக்கான படப்பிடிப்புகள் முடிவடைந்து அவர்கள் சென்னை திரும்பியிருக்கின்றனர். அவர்களில் மிஷ்கின் விஜய்யையும், லோகேஷ் கனகராஜையும் ஏகத்துக்கும் புகழ்ந்திருந்தார்.

படப்பிடிப்பில் இணைந்த சஞ்சய் தத்
காஷ்மீருக்கு லியோ படக்குழு சென்று ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகக்கூடிய சூழலில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் ஷூட்டிங்கில் கலந்துகொள்ளாமல் இருந்தார். அவர் சில வாரங்களுக்கு முன்னதாக லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார். அதுதொடர்பான வீடியோ வெளியாகி இணையத்தில் ட்ரெண்டானது. தற்போது காஷ்மீரில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் முகாமிட்டிருப்பதகாவும் அவர்கள் தொடர்பான காட்சிகள் படமாக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

இந்த வாரம் நிறைவடைகிறதா ஷூட்டிங்?
இந்நிலையில் காஷ்மீரில் நடந்துவரும் லியோ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த வாரத்துடன் நிறைவடைய இருப்பதாக தற்போது கோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியாகியிருக்கிறது. லியோ படத்தின் காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பும் விஜய், லோகேஷ் கனகராஜ், த்ரிஷா உள்ளிட்டோர் குட்டி ரெஸ்ட் எடுக்கப்போகிறார்களாம்.

க்ளைமேக்ஸ் ஷூட்டிங் எங்கு நடக்கப்போகிறது?
இதனையடுத்து சென்னையில் ஒருவாரம் படத்தை ஷூட் செய்துவிட்டு படத்தின் க்ளைமேக்ஸை ஷூட்டிங் செய்வதற்காக ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியை தேர்ந்தெடுத்திருக்கிறதாம் படக்குழு. இதற்காக விஜய், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் ஹைதராபாத் பறக்க இருக்கிறார்கள் என்ற தகவல் ஒன்று கோடம்பாக்கத்தில் வட்டமடிக்கிறது.

பஞ்சாயத்துக்கு ஆளான இடம் ராமோஜி பிலிம் சிட்டி
இதற்கிடையே தமிழ் படத்தின் ஷூட்டிங்குகளை தமிழ்நாட்டில்தான் நடத்த வேண்டும் என ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் வலியுறுத்திவந்தனர். இதனால் துணிவு படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் நடந்தது. எனவே இப்போது லியோ படக்குழு ஹைதராபாத் சென்றால் ஏதேனும் சிக்கல் எழுமா என்ற கேள்வியை சிலர் எழுப்பிவருகின்றனர்.
அதேசமயம் ராமோஜி பிலிம் சிட்டியில் தமிழ் படங்களை எடுக்கவே கூடாது என கூறவில்லை. முழு படத்தையும் தேவையில்லாம எதற்கு அங்கு எடுக்க வேண்டும் என்றுதான் பேச்சு எழுந்தது. லோகேஷ் கனகராஜோ தேவைப்படுவதால் மட்டுமே ஹைதராபாத்தில் ஷூட் செய்ய ப்ளான் செய்திருக்கிறார். எனவே இதில் எந்த சிக்கலும் எழ வாய்ப்பில்ல்லை என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











