Leo Box Office - தமிழில் மட்டுமல்ல தெலுங்கிலும் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பும் லியோ
சென்னை: Leo Collection (லியோ வசூல்) தெலுங்கு மொழியில் லியோ செய்திருக்கும் முதல் வசூல் குறித்து தெரிய வந்திருக்கிறது.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் உருவாகியிருக்கிறது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படம் பான் இந்தியா படமாக நேற்று வெளியானது. படத்தின் ரிலீஸை ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர். படத்தின் பெயர் போட ஆரம்பித்ததிலிருந்து ரசிகர்கள் உற்சாகத்தில் கத்திக்கொண்டும் விசிலடித்துக்கொண்டும் படத்தை ரசிக்க ஆரம்பித்தனர்.

லோகேஷ் மேஜிக்: படத்தை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் மேக்கிங்கில் அதகளம் செய்துவிட்டார். கொடுத்த பணத்துக்கு படம் ஒர்த்துதான் என்று சிலாகிக்கின்றனர். அதிலும் மாஸ்டர் படத்தில் விஜய்யை எப்படி வேறு மாதிரி நடிக்க வைத்திருந்தாரோ அதேபோல் லியோவிலும் விஜய்யை வேறு மாதிரி நடிக்க வைத்திருக்கிறார். விஜய்யின் நடிப்பை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக இருக்கிறது எனவும் கூறினர்.
கலவையான விமர்சனங்கள்: ஒருபக்கம் இப்படி விஜய் ரசிகர்கள் படத்தை கொண்டாடிக்கொண்டிருந்தாலும் மறுபக்கம் படத்தை பார்த்த பொதுவான ரசிகர்கள் படம் தங்களை திருப்திப்படுத்தவில்லை என்று தங்களது விமர்சனத்தை தொடர்ந்து கூறிவருகின்றனர். மேலும் பழைய கதையை ரம்மியமான லொக்கேஷனில் லோகேஷ் கனகராஜ் ஷூட் செய்திருக்கிறார் என்றும் அவர் ஓபனாகவே தெரிவிக்கின்றனர்.
பாக்ஸ் ஆபிஸ்: லியோ படம் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தி பொதுவான ரசிகர்களை திருப்திப்படுத்தாவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் சக்கைப்போடு போட்டிருக்கிறது. உலகளவில் 140 கோடி ரூபாயும் தமிழ்நாட்டில் மட்டும் 30 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாகவும் தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தெலுங்கு பாக்ஸ் ஆபிஸ்: இந்நிலையில் தெலுங்கு மொழியில் லியோ செய்திருக்கும் முதல் நாள் வசூல் குறித்து தெரியவந்திருக்கிறது. அதன்படி முதல் நாளில் 16 கோடி ரூபாய் வசூலாகியிருப்பதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவை பொறுத்தவரை லியோ படம் நல்ல வசூலை செய்திருந்தாலும் வட இந்தியாவில் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்ற ஒரு தகவலும் உலாவுகிறது. அதாவது வட இந்தியாவில் லியோ திரைப்படம் முதல் நாளில் மொத்தமே நான்கு கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications











