அந்த முட்டாள் வில்லனுங்க ஒரு DNA டெஸ்ட் பண்ண மாட்றாங்க.. ஸ்டாண்ட் அப் காமெடி வரை லியோ அசிங்கப்படுதே!

சென்னை: இதுவரை விஜய் நடிக்காத அளவுக்கு ராவான ஆக்‌ஷன் படமாக லியோ வரப்போதுன்னு வெயிட் பண்ண ரசிகர்களுக்கு கடைசியில் விஜய் டிவி பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து தான் லோகேஷ் கனகராஜ் எடுத்திருப்பாரோ என ஸ்டாண்ட் அப் காமெடியன் ஒருவர் அதற்குள் லியோவை வைத்து மரண பங்கம் படுத்திய வீடியோ தீயாக பரவி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் படங்கள் என்றாலே வில்லன் கதாபாத்திரம் அந்தளவுக்கு வெயிட்டாக இருக்கும் என்பதை தான் இதுவரை பார்த்து வந்தோம்.

Leo movie gets trolled in a corporate stand up comedy show video trending

இந்த படத்தில் கேஜிஎஃப் 2 வில்லனையே இறக்கி இருக்காரே என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அதை விட விஜய் தான் பவர்ஃபுல் என காட்டி வில்லன் போர்ஷனை சொதப்பி விட்டனர்.

ஆர்ட்டிஸ்ட்டான அர்ஜுன்: ரோலக்ஸை விட அர்ஜுன் தெறிக்க விடுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவர் பிரஷ்ஷை எடுத்துக் கொண்டு ஆர்ட்டிஸ்ட் போல ஓவியம் வரைந்துக் கொண்டு லியோவையும் பார்த்திபனையும் மேட்ச் பண்ணி அறிமுக சீனிலேயே காமெடி பண்ண கடைசி சீனில், நீ பார்த்திபன் தான் என்னை கொன்னுடாத விட்ருப்பான்னு உயிர் பிச்சை கேட்கும் அளவுக்கு படு சுமாராக அவரது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது.

ஸ்டாண்டப் காமெடி: லியோ திரைப்படம் வெளியாகி 3 நாட்களில் அந்த படத்தை வைத்து ஐடி கம்பெனியில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்தே பிரகாஷ் என்பவர் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறார். இந்த அளவுக்கு ஜெட் வேகத்தில் ஸ்டாண்டப் காமெடி வரை சென்று லியோ படம் அசிங்கப்பட்டு விட்டதே என அஜித் ரசிகர்கள் அந்த வீடியோவை ஷேர் செய்து கலாய்த்து வருகின்றனர்.

டிஎன்ஏ டெஸ்ட்: லியோ படம் ஃபர்ஸ்ட் ஹாஃப் நல்லா இருந்துச்சு, செகண்ட் ஹாஃப்பில் சஞ்சய் தத், அர்ஜுன் எல்லாம் வந்து நீ தான் லியோவா? லியோவான்னு கேட்டு விஜய்யை டார்ச்சர் செய்வது, த்ரிஷாவை டார்ச்சர் செய்வது படத்தை பார்க்கும் நம்மை டார்ச்சர் செய்வது என அநியாயம் பண்றாங்க, எல்லாமே முட்டாள் வில்லன்களாக இருக்காங்க, ஒரே ஒரு டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தா உண்மை தெரியப்போகுது என அந்த ஸ்டாண்ட் அப் காமெடியன் பேச ஊரே தற்போது அந்த வீடியோவுக்கு சிரித்து வருகிறது.

பாரதி கண்ணம்மா: லோகேஷ் கனகராஜ் ஹிஸ்டரி ஆஃப் வயலன்ஸ் பார்த்து லியோ எடுத்த மாதிரி தெரியல விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் பார்த்து லியோ எடுத்தது போல தெரிகிறது என மரண கலாய் கலாய்த்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X