Leo Hyena character: லியோ படத்தில் Hyena-வாக நடித்த நடிகர்.. வெளியான தகவல்!

சென்னை: நடிகர் விஜய் லீட் கேரக்டரில் நடித்துள்ள லியோ படம் நாளை மறுநாள் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

இந்தப் படத்தின் ட்ரெயிலர், பாடல்கள் உள்ளிட்டவை வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளன.

Leo movie Hyena role is made by Actor Kalaimani in front of Camera

இந்தப் படத்தில் நடிகர் விஜய்யின் ஹைனாவுடனான சண்டைக்காட்சிகள் 10 நிமிடங்கள் இடம்பெற்றுள்ளதாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய பேட்டிகளில் குறிப்பிட்டுள்ளார்.

லியோ படத்தில் ஹைனாவாக நடித்த நடிகர்: நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள லியோ படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. சர்வதேச அளவில் டிக்கெட் புக்கிங்கில் இந்தப் படம் மாஸ் காட்டி வருவதே இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பிற்கு சாட்சியாக உள்ளது. சர்வதேச அளவில் இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலை முதல் நாளிலேயே பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கேற்ப ப்ரீ புக்கிங், கவுண்ட்டர் புக்கிங் என மிகப்பெரிய வசூலுக்கு அடிபோட்டு வருகிறது லியோ படம். அட்வான்ஸ் புக்கிங்கிலேயே 125 கோடி ரூபாய்களுக்கு மேல் லியோ படம் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூகேவில் லியோ படத்தின் 73,500 டிக்கெட்டுகளை ரசிகர்கள் புக் செய்துள்ளதாக அகிம்சா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. இது மிகப்பெரிய சாதனை என்றும் கூறியுள்ளது.

Leo movie Hyena role is made by Actor Kalaimani in front of Camera

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளிலும் இந்தப் படத்தின் புக்கிங் மிகப்பெரிய சாதனையாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு உயர்நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. இந்த அளவிற்கு படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதற்கு விஜய் -லோகேஷ் கூட்டணியும் முக்கியமான காரணமாக அமைந்துள்ளது. முன்னதாக இவர்கள் இணைந்திருந்த மாஸ்டர் மற்றும் சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படங்கள் இந்த எதிர்பார்ப்பிற்கு காரணமாக உள்ளது.

இந்தப் படத்தின் ஹைனா முக்கியமான கேரக்டராக அமைந்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தன்னுடைய சமீபத்திய பேட்டிகள் கூறியிருந்தார். படத்தின் பர்ஸ்ட் லுக்கில் ஹைனாவின் பற்களை விஜய் ஆக்ரோஷமாக உடைப்பது போல காணப்பட்டது. இதேபோல சமீபத்தில் வெளியான படத்தின் ட்ரெலரிலும் Hyenaவின் VFX காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதனால் ஹைனா மீதான ரசிகர்களின் ஆர்வம் மிகவும் அதிகமாக காணப்பட்டது.

Leo movie Hyena role is made by Actor Kalaimani in front of Camera

படத்தின் ட்ரெயிலர் சில விமர்சனங்களை ஏற்படுத்திய நிலையில், ஹைனா இடம்பெற்ற காட்சிகளை மிகவும் தத்ரூபமாக படக்குழுவினர் செய்திருந்தனர். இதன் விஎப்எக்ஸ் காட்சிகள் மிகவும் தத்ரூபமாக அமைந்த நிலையில், இந்தக் காட்சிகளை தத்ரூபமாக கொண்டுவர கேமராவின் பின்புலத்தில் நடித்தவர் பெயர் கலைமணி என்பது தெரியவந்துள்ளது. விஎப்எக்ஸ்க்கு உதவும் வகையில் இவர்தான் ஹைனாவாக கேமரா முன்பு நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X