Leo Update - நாளை வெளியாகிறது லியோவின் அடுத்த அப்டேட்?.. வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்கள்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்திலிருந்து நாளை புதிய அப்டேட் வெளியாகலாம் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது அவசியப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் வெளிநாட்டில் ஓய்வில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.
ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. இருப்பினும் இந்தத் தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை.
சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ்: லியோ படத்தில் பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. சஞ்சய் தத்தான் படத்தில் முக்கியமான வில்லன் என்றும் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு கடந்த ஆம் தேதி அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியிடப்பட்டன. அதில் படுமாஸாக தோன்றினார் சஞ்சய். மேலும் அவர் ஆண்டனி தாஸ் என்ற கதாபாத்திரத்தை படத்தில் ஏற்றிருப்பது க்ளிம்ப்ஸ் மூலம் உறுதியாகியிருக்கிறது.

அடுத்த க்ளிம்ப்ஸ்: இந்நிலையில் லியோ படத்திலிருந்து அடுத்த க்ளிம்ப்ஸ் காட்சி நாளை வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது. நாளை நடிகர் அர்ஜுனின் பிறந்தநாள் என்பதால் அவர் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் லலித் அளித்த பேட்டியில்கூட ஆகஸ்ட் 15ஆம் தேதிதான் அடுத்த அப்டேட் வெளியாகும் என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் சென்ற படக்குழு: இதற்கிடையே படத்தின் பேட்ச் ஒர்க் இன்னமும் இருப்பதால் விஜய்யை தவிர்த்து படக்குழுவிலிருந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் மற்றும் கேமராமேன் ஆகியோர் காஷ்மீர் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. படமானது அக்டோபர் 19ஆம் தேதி திரையரங்குகளில் பான் இந்தியா படமாக வெளியாகவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











