Rohini Leo - சூறையாடிய ரசிகர்கள்.. லியோவுக்கு ரோகிணி திரையரங்கம் வைத்த ஆப்பு.. ரிலீஸ் இல்லை என அறிவிப்பு
சென்னை: Rohini Theatre (ரோகிணி தியேட்டர்) ரோகிணி திரையரங்கில் லியோ திரைப்படம் ரிலீஸ் செய்யப்படாது என்று தியேட்டர் நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
லியோ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. இதற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பட ரிலீஸ் நாளிலிருந்து ஒரு வாரம்வரைக்கும் பெரும்பாலான தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கண்டிப்பாக லியோ படம் வசூல் சாதனை புரியும் என்ற ஆணித்தரமான நம்பிக்கையில் இருக்கின்றனர் ரசிகர்கள்.

பிரச்னை: லியோ படத்தின் முதல் சிங்கிளிலிருந்தே அந்தப் படத்தை சுற்றி பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒருவழியாக அனைத்து பிரச்னைகளும் முடிந்துவிட்டது என்று படக்குழுவும், விஜய் ரசிகர்களும் எதிர்பார்த்திருந்த சூழலில் அடுத்தக்கட்ட பிரச்னையாக ஓவர் ரேட்டில் டிக்கெட் என்ற பூதாகரம் கிளம்பியது. அதையும் சமாளித்த படக்குழுவுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக சிறப்புக் காட்சி அனுமதி அளித்தது. ஆனால் அதிலும் ஒரு ட்விஸ்ட் வைக்கும் விதமாக சிறப்பு காட்சியை 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என்று அறிவித்தது.
7 மணி காட்சி இல்லை: அதனைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்ற படக்குழுவை நீதிமன்றமும் ஏமாற்றியது. தொடர்ந்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் 7 மணி காட்சி இல்லை என்றும் அறிவித்துவிட்டது. இதனால் படக்குழு என்ன செய்வதென்று தெரியாமல் ஏமாற்றத்தின் உச்சத்தில் இருக்கிறது. நேற்று பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழு தலைமை செயலாளரை சந்தித்ததும் குறிப்பிடத்தக்கது.
ரோகிணியில் இல்லை: சூழல் இப்படி இருக்க பட தயாரிப்பு நிறுவனம் தியேட்டர்களிடம் 80 சதவீதம்வரை பங்கு தொகை கேட்கிறது. அதற்கு திரையரங்குகள் கடுமையான எதிர்வினையை ஆற்றுகின்றன. திருச்சி சாந்தி சினிமாஸ் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. இந்நிலையில் அடுத்த அதிர்ச்சி விஜய் ரசிகர்களுக்கு வந்திருக்கிறது.
அதாவது சென்னையில் பிரபல திரையரங்குகளில் ஒன்றான ரோகிணி தியேட்டரும் லியோ படத்தை திரையிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. அதுகுறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுவிட்டது. முன்னதாக லியோ ட்ரெய்லரின்போது ரோகிணி தியேட்டர் சீட்டுக்களை விஜய் ரசிகர்கள் அடித்து நொறுக்கியது நினைவுகூரத்தக்கது. அதன் எதிரொலியாகக்கூட இது இருக்கலாம் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications











