Leo Producer - லியோ தயாரிப்பாளரை ஃபோனில் திட்டிய விஜய்.. இது வேற நடந்திருக்கா?.. முழு விவரம் உள்ளே
சென்னை: Leo Producer Lalit (லியோ தயாரிப்பாளர் லலித்) லியோ தயாரிப்பாளர் லலித் குமாரை விஜய் ஃபோனில் அழைத்து திட்டிய சம்பவம் தெரியவந்திருக்கிறது.

கோலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளராக இருப்பவர் லலித் குமார். அவர் தயாரிப்பில் கடந்த 19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்திருக்கின்றன. இருந்தாலும் படம் வசூல் ரீதியாக சக்கைப்போடு போட்டதாக ரசிகர்கள் கருதுகின்றனர். மேலும் முதல் நாள் 148 கோடி ரூபாய் வசூலித்ததாக படக்குழுவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
ஆறு நாள் வசூல்: படம் வெளியாகி இன்றுடன் ஆறு நாட்கள் முடிவடைகின்றன. ஆறு நாட்கள் நிலவரப்படி இதுவரை மொத்தம் 500 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. நேற்று இந்தியாவில் மட்டும் மொத்தம் 35 கோடி ரூபாய் வசூல் என தெரிகிறது. இருந்தாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
லலித் பேட்டி: இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், "ஒரே நேரத்தில் கோப்ரா மற்றும் மகான் ஆகிய திரைப்படங்களை தயாரித்துக்கொண்டிருந்தேன். கோப்ரா படம் எனக்கு கால தாமதத்தையும் கொடுத்தது. அந்தப் படத்தின் இயக்குநரோ இரண்டாவது முறை ரஷ்யா போக வேண்டும் என்றார்.அது எனக்கு சரியாக படவில்லை.
மகான் ஓடிடி: அப்போது இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரிப்பது கஷ்டமாக இருந்தது. பண நெருக்கடி வேறு இருந்தது. எனவே கார்த்திக் சுப்புராஜிடம் மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவது பற்றி பேசி அவரை சமாதானம் செய்தேன். மேலும் கொரோனா காலம் முடிந்து பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா இல்லையா என்ற சந்தேகமும் இருந்தது.

திட்டிய விஜய்: அதனால்தான் மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிடுவது என்று தைரியமாக முடிவெடுத்தேன். மகான் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிறகு விஜய் எனக்கு ஃபோன் செய்து இந்த மாதிரியான படத்தை போய் ஓடிடியில் ரிலீஸ் செய்திருக்கியே. இது தியேட்டர்லதானே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும் என திட்டினார். அந்தப் படம் ஓடிடியில் வந்தது விக்ரமுக்கும் வருத்தம்தான். விஜய் திட்டிய பிறகுதான் மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டு தவறு செய்துவிட்டோமோ என்று எனக்கு தோன்றியது"" என்றார்.


Click it and Unblock the Notifications











