வயிற்றெறிச்சலா இருக்கு.. லியோ கேரளால மாஸ் காட்டுது..ரோகிணில காத்துவாங்குது!

சென்னை: பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் திருவிழாப்போல இருக்கும் ரோகிணி தியேட்டர் இன்று ஆரவாரமே இல்லாமல் இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

படத்திற்காக 5 நாட்களுக்கு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில், 7 மணி காட்சிக்கு அனுமதி இல்லை என்று அரசு தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துவிட்டதால், தமிழகத்தில் படம் 9 மணிக்கு திரையிடப்பட்டது.

Leo movie released in Rohini theater with tight security

லியோ திரையிடப்படவில்லை: லியோ திரைப்படம் வெளியாவதற்கு முன்பே சர்வதேச அளவில் சாதனை படைத்து வந்தாலும், சென்னையில் முக்கிய தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு தொடங்காமலேயே இருந்தது. இதையடுத்து, ரோகிணி தியேட்டர் வளாகத்தில் டிக்கெட்டிற்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தியேட்டர் நிர்வாகம் லியோ இங்கு திரையிடப்படவில்லை என்ற போஸ்டரை ஒட்டியது.

11.30 காட்சி: லியோ டிரைலர் ரோகிணி தியேட்டரில் வெளியான போது ஓவர் குஷியாகிப்போன ரசிகர்கள் தியேட்டரில் ஓவர் ஆட்டம் போட்டு, இருக்கையை சேதப்படுத்தியதால், லியோ டிக்கெட் விற்பனை சத்தமே இல்லாமல் நடந்தது. தமிழகத்தில் அனைத்து தியேட்டர்களிலும் 9 மணிக்கு படம் திரையிடப்பட்ட நிலையில் ரோகிணி தியேட்டரில் 11.30 மணிக்கு லியோ படம் திரையிடப்பட்டது.

Leo movie released in Rohini theater with tight security

வயிற்றெறிச்சலா இருக்கு: வழக்கமாக பெரிய நடிகர்கள் படம் வெளியானால், திருவிழாப்போல கொண்டாட்டம் இருக்கும் நிலையில், இன்று ரோகிணி தியேட்டரில் பெரும்பாலும் போலீஸ் தலைகளையே காண முடிந்தது. இதைப்பார்த்து நொந்து போன ரசிகர்கள், ரோகிணி தியேட்டரை பார்க்க வயிற்றெறிச்சலா இருக்கு செலப்ரேஷனே இல்ல, கேரள மாநிலத்தில் லியோ திரைப்படம் முதல் நாள் முதல் காட்சி ஓடுது. ஆனால் தளபதியின் தாய்வீடான ரோகிணி தியேட்டர் காத்துவாங்கிக்கொண்டு இருக்கிறது.

தீபாவளி, பொங்கல் வேண்டாம்: தீபாவளி திருவிழாப்போல இருக்கும் ரோகிணி தியேட்டர் இன்னைக்கு ஒன்னுமே இல்லாமல் வெறிச்சோடி இருக்கு. தீபாவளி, பொங்கல் பண்டிகை வேண்டாம், இன்னைக்கு ஒருநாளைக்கு இங்கு இந்த கொண்டாட்டத்திற்கு மட்டும் அனுமதி கிடைத்தால் போதும் என்று இளம் ரசிகர்கள் மனம் நொந்து பேசினார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X