Leo Update - லியோ செகண்ட் சிங்கிள் எப்போ தெரியுமா?.. விஜய் ரசிகர்களே ரெடியா இருங்க

சென்னை: Leo Second Single (லியோ செகண்ட் சிங்கிள்) லியோ படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.

பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயம் தேவைப்படுகிறது. தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

Leo Movie Second Single Will Release on September Second Week

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் அமெரிக்காவில் இருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளிநாட்டில் நடத்தினால் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் தாட் எழுந்துவிடும் என படக்குழு எண்ணுவதாகவும் அதன் காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

க்ளிம்ப்ஸ்: இதற்கிடையே லியோ படத்திலிருந்து சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திரம் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் வெளியாகின. பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் கண்டிப்பாக லியோவிலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி அடிக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செகண்ட் சிங்கிள்: இந்நிலையில் லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் அந்தப் பாடல் வெளியாகலாம் என கருதப்படுகிறது. இந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார் என்றும்; படத்தில் மொத்தமே இரண்டு பாடல்கள்தான் என்றும் கூறப்படுகிறது. முதல் பாடலான நா ரெடிதான் பாடல் ஹிட்டானாலும் சர்ச்சையை சந்தித்தது. எனவே இந்தப் பாடல் சர்ச்சையை சந்திக்காமல் இருக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X