Leo Song Shooting - லியோ படத்தின் பாடல் ஷூட்டிங் நாளை நடக்கிறது.. இதுதான் அந்த பிரமாண்ட பாடலா?

சென்னை: Leo Song Shooting (லியோ பாடல் ஷூட்டிங்) லியோ படத்தின் பாடல் ஷூட்டிங் நாளை சென்னையில் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யை வைத்து லியோ படத்தை இயக்கிவருகிறார் லோகேஷ் கனகராஜ். மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்திருப்பதாலும், விக்ரம் படத்தின் மெகா ப்ளாக் பஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அக்டோபர் 19ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

Leo Movie Song Shooting Starts from Tommorrow At Chennai

லியோ ஷூட்டிங்: லியோ படத்தின் ஷூட்டிங் இரண்டு மாதங்களாக காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்தது. அங்கு விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டோர் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. காஷ்மீரில் நடந்த ஷூட்டிங் தொடர்பாக லியோ படக்குழு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அந்த வீடியோ வழக்கமான மேக்கிங் வீடியோவாக இல்லாமல், படத்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்கள் சம்பந்தமான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. இது ஒட்டுமொத்த கோலிவுட்டிலும் பெரும் வரவேற்பை பெற்றது.

சென்னையில் விறுவிறு: காஷ்மீர் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு குட்டி ரெஸ்ட் எடுத்தது. அதனையடுத்து சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் செட் போட்டு சில வாரங்கள் மும்முரமாக படப்பிடிப்பு நடந்தது. அந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு பையனூரில் ஷுட்டிங் நடந்தது. அந்த ஷெட்யூலை முடித்துவிட்டு இப்போது ஆதித்ய ராம் ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்துவருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் புலிப்பாய்ச்சலில் ஷூட்டிங்கை நடத்திவருவதாக படத்தில் நடித்து முடித்த மிஷ்கின் சமீபத்தில் தெரிவித்தார்.

தந்தை சஞ்சய், சகோதரர் அர்ஜுன்?: இதற்கிடையே லியோ படத்தின் கதை குறித்த தகவல் வெளியானது. அதன்படி, ஒரு சம்பவத்தை செய்துவிட்டு தனது அடையாளத்தை மறைத்து காஷ்மீரில் விஜய் பேக்கரி வைத்து வாழ்வார் எனவும், அவருக்கு சகோதரராக அர்ஜுன் நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. மேலும் சஞ்சய் தத் விஜய்க்கு தந்தையாக நடிக்கிறார் என்றும் அவரும் படத்தில் கேங்ஸ்டர்தான் எனவும் கூறப்பட்டது. படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் முடிந்துவிடும். விஜய் விரைவில் டப்பிங் கொடுக்கவிருக்கிறார் என்று பேச்சு எழுந்திருக்கிறது.

Leo Movie Song Shooting Starts from Tommorrow At Chennai

பாடல் ஷூட்டிங்: இந்நிலையில் லியோ படத்தில் இடம்பெறவிருக்கும் ஒரு பாடலுக்கான ஷூட்டிங் சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் நாளை தொடங்கவிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான ஷூட்டிங் இரண்டிலிருந்து மூன்று நாள்கள்வரை நடைபெறலாம் என்றும் கருதப்படுகிறது. இதனையொட்டி ஸ்டூடியோவில் பிரமாண்ட ஸ்டூடியோ போடப்பட்டிருப்பதாகவும் படக்குழு வட்டாரத்திலிருந்து தகவல் கசிந்துள்ளது.

2000 டான்ஸ்டர்கள்?: இதற்கிடையே லோகேஷ் கனகராஜ் பெரிதாக பாடலுக்கு முக்கியத்துவம் கொடுக்காதவர் என்ற முத்திரை இருக்கிறது. அதை லியோ மூலம் அவர் உடைக்கவிருக்கிறார். படத்தின் ஒரு பாடலுக்கு 2000 டான்ஸர்கள் பயன்படுத்தப்படவிருக்கிறார்கள் என்ற செய்தி உலாவி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. சூழல் இப்படி இருக்க நாளை பாடல் ஷூட்டிங் என கூறப்படுவதால், ஒருவேளை அந்தப் பாடலின் ஷூட்டிங்தான் நடக்கவிருக்கிறதோ என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X