Leo Story: லியோ பாட்ஷா கதை இல்லை.. அதுக்கும் மேல.. டபுள் ஆக்ஷனில் நடிக்கிறாரா விஜய்?
சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், பிரியா ஆனந்த், சாண்டி, மன்சூர் அலி கான், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் மிரட்டல் ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது லியோ.
சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் ஆரம்பிக்கப்பட்ட விஜய்யின் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் 50 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.

தற்போது ஆதித்யா ராம் சிட்டியில் பிரம்மாண்ட செட் போட்டும் பிரசாத் லேப்பிலும் அந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தின் கதை குறித்த தகவல்கள் கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகின்றன.
பாட்ஷா படக் கதை இல்லை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தின் கதை அப்படியே பாட்ஷா படத்தின் கதை என சினிமா வட்டாரத்தில் ஒரு தகவல் தீயாக பரவி வருகிறது.

ஒரு இடத்தில் பார்த்திபனாக வாழ்ந்து வரும் விஜய் இன்னொரு இடத்தில் லியோவாக சம்பவம் செய்வது தான் கதை என்றும் கூறுகின்றனர். ஆனால், சமீபத்தில் கிடைத்துள்ள தகவலின் படி லியோ படம் பாட்ஷா படத்தின் கதை இல்லை என்றும் டோட்டலாக வேறு ஒரு கதையைத் தான் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார் என்கின்றனர்.
டபுள் ஆக்ஷன் கன்ஃபார்ம்: இந்த படத்தில் பாட்ஷா மற்றும் தெறி படத்தில் வருவது போல ஒரு இடத்தில் ஒரு ஆளாகவும் இன்னொரு இடத்தில் இன்னொரு நபராகவும் நடிகர் விஜய் வரப் போவது இல்லை என்றும் டபுள் ஆக்ஷனில் நடித்து தூள் கிளப்ப விடப் போகிறார் என்றும் ஹாட் தகவல்கள் கசிந்துள்ளன.

டபுள் ஆக்ஷனில் தான் லியோ படத்தில் விஜய் நடித்து வருகிறார் என்பது கன்ஃபார்ம் என்றும் ஒரு விஜய்க்கு த்ரிஷாவும் இன்னொரு விஜய்க்கு பிரியா ஆனந்தும் ஜோடி என்கின்றனர்.
ஆள்மாறாட்டம் இருக்குமா?: எம்ஜிஆர் காலத்தில் இருந்தே டபுள் ஆக்ஷன் படங்களில் ஆள்மாறாட்டக் கதை இருக்கும். அதே போன்ற ஒரு விஷயம் வேறலெவலில் ஆக்ஷன் த்ரில்லராக இந்த படத்தில் இருக்கும் என்கின்றனர்.

லியோவுக்கு பதிலாக பார்த்திபனை எதிரிகள் டார்கெட் செய்து தாக்க வரும் நிலையில், என்ன ஆகுது என்பதும் லியோ பார்த்திபனை காப்பாற்றுகிறாரா? பார்த்திபன் தனது குடும்பத்தைக் காப்பாற்ற என்ன பண்ணப் போகிறார் என்கிற கதையாக லியோ இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மாஸ்டர் படத்திலேயே முதல் பாதியில் விஜய்யை குடிகாரனாகவும் இரண்டாம் பாதியில் வாத்தியாராகவும் காட்டிய லோகேஷ் கனகராஜ் இந்த முறை விஜய்யை டபுள் ஆக்ஷனில் காட்ட முடிவு செய்திருப்பதாக உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன. எப்படி இருந்தாலும், எது உண்மை என்பது இந்த ஆண்டு அக்டோபர் 19ம் தேதி தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











