Leo Release - லியோ ரிலீஸ் உரிமை..எந்த நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது தெரியுமா?
சென்னை: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ படத்தை கேரளாவில் வெளியிடும் உரிமையை கோகுலம் பிலிம்ஸ் கைப்பற்றியிருக்கிறது.
பீஸ்ட் படத்தின் தோல்வி, வாரிசுக்கு கிடைத்த அதிகப்படியான நெகட்டிவ் விமர்சனத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். விஜய்க்கு மாஸ்டர் பீஸ் கொடுத்த லோகேஷ் மீண்டும் அவருடன் இணைந்திருப்பதால் படம் மெகா ஹிட்டாகும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அதை பூர்த்தி செய்யும் விதமாக படத்தின் அறிவிப்போடு வெளியான க்ளிம்ப்ஸும் உணர்த்தியது.

ஷூட்டிங்: லியோவின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலாக காஷ்மீரில் நடந்தது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் கடுங்குளிரில் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு பிரசாத் ஸ்டூடியோவில் ஷூட்டிங்கை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பையனூரில் ஷூட்டிங் முடிந்தது. இப்போது திருப்பதியில் இறுதிக்கட்ட ஷூட்டிங் நடந்துவருவது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீரில் லியோ: இதற்கிடையே காஷ்மீரில் ஷூட்டிங் நடந்தபோது படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டது. அந்த மேக்கிங் வீடியோ வழக்கமாக இல்லாமல் பட்த்தில் பணியாற்றிய கடைநிலை ஊழியர்களை மையப்படுத்தி இருந்தது. இதன் காரணமாக அந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டானது. மேலும் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும், லியோ படக்குழுவுக்கும் பலரும் தங்களது பாராட்டை தெரிவித்தனர்.
ஃபர்ஸ்ட் லுக், ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்தச் சூழலில் விஜய் கடந்த மாதம் 22ஆம் தேதி 49ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அதனையொட்டி லியோ படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக்கும், நா ரெடி என்ற ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளியானது. ஃபர்ஸ்ட் லுக்கில் ரத்தம் தெறிக்க சுத்தியலுடன் ஹைனா விலங்குடன் விஜய் காட்சியளித்தார். அது பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் முதல் சிங்கிளும் பலத்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் அதே பாடலுக்கு பஞ்சாயத்தும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
திரையரங்க உரிமை: இந்நிலையில் லியோ படத்தை கேரளாவில் வெளியிடுவதற்கான உரிமத்தை கோகுலம் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியிருக்கிறது. இதற்கிடையே தமிழ்நாட்டில் படத்தை வெளியிடுவதற்கான உரிமத்தை பெற ஏஜிஎஸ் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாகவும்; ஆனால் லலித் சொல்லும் தொகைக்கும், ஏஜிஎஸ் கேட்கும் தொகைக்கும் 20 கோடி ரூபாய் இழுபறியில் இருப்பதாகவும் கூறப்பட்டது.
அனுராக்: முன்னதாக படத்தில் ஏற்கனவே பல நட்சத்திரங்கள் இருக்கும் சூழலில் புதிதான அனுராக் காஷ்யப் படத்தில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் நடிகர் தனுஷும் லியோவில் கேமியோ ரோலில் நடிக்கவிருக்கிறார் என ஒரு தகவல் நேற்றிலிருந்து உலாவுகிறது.


Click it and Unblock the Notifications











