Leo Update - முந்தைய போஸ்டரை சிதறடிக்க வந்த புதுசு.. லியோ படத்தின் புதிய போஸ்டர்.. ரசிகர்கள் உற்சாகம்

சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை லோகேஷ் இயக்கிய நான்கு படங்களுமே மெகா ஹிட்டாகியிருக்கின்றன. ஏன் இருவரும் இதற்கு முன் இணைந்த மாஸ்டர் படமும் நூறு கோடி ரூபாயை வசூலித்திருக்கிறது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

Leo Movies New Poster is Out Now

அவசியம் தேவை: அதுமட்டுமின்றி லியோ படத்தின் வெற்றி விஜய்க்கு இப்போது அவசியப்படுகிறது.ஏனெனில் இதற்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய படங்கள் விமர்சன ரீதியாக சரியாக போகவில்லை. எனவே இந்தப் படத்தை மெகா ஹிட்டாக கொடுக்க வேண்டும் என்பதில் முனைப்போடு இருக்கிறார் விஜய். அவருக்காக லோகேஷும் கடுமையாக உழைத்திருக்கிறார்.

அடுத்தடுத்த அப்டேட்டுகள்: படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன்பு முடிந்தது. பேட்ச் ஒர்க்கும் முடிந்துவிட்டது. இதன் காரணமாக படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரும் என்று கருதப்பட்டது. ஆனால் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள், ஃபர்ஸ்ட் லுக்கை தவிர்த்து வேறு எதுவும் வராமல் இருந்தது. ஆனால் அப்டேட் சரவெடியை சஞ்சய் தத் க்ளிம்ப்ஸும், அர்ஜுன் க்ளிம்ப்ஸும் பற்ற வைத்தன.

போஸ்டர் மேளா: படம் ரிலீஸாக இன்னும் ஒரு மாதம் இருக்கிறது. எனவே இனி அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் தெரிவித்திருந்தார். மேலும் த்ரிஷாவும் லியோ படத்தின் ப்ரோமோஷன் பயங்கரமாக இருக்குமென கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க படத்தை தயாரித்திருக்கும் செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ நேற்று போட்டிருந்த ட்வீட்டில், இன்றிலிருந்து (நேற்று) அடுத்த நான்கு நாட்கள் லியோ போஸ்டர் வெளியாகும் என தெரிவித்திருந்தது.

புதிய போஸ்டர்: அதன்படி நேற்று லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது. அதில் காஷ்மீரில் விஜய் இருப்பது போல் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று லியோ படத்துக்கான கன்னட போஸ்டர். அதில் கைத்துப்பாக்கிக்குள் விஜய் இருக்கிறார். மேலும் அந்தப் போஸ்டரில் Keep Calm And Plot Your Escape (அமைதியாக இருந்து தப்பிக்க திட்டமிடுங்கள்) என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leo Movies New Poster is Out Now

ஆடியோ ரிலீஸ்: இதற்கிடையே படத்தின் ஆடியோ ரிலீஸ் குறித்த தகவலும் சமீபமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் லியோ ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய்யும் விரைவில் டப்பிங்கை கொடுத்து முடிக்கவிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X