Leo Update - அடேங்கப்பா செம ட்ரீட் காத்திருக்கு போல.. வெளியானது லியோ படத்தின் புதிய போஸ்டர்
சென்னை: Leo Update (லியோ அப்டேட்) லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்விக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய்.அடுத்த சூப்பர் ஸ்டார் ரேஸில் அவரை அவரது ரசிகர்கள் நிறுத்தியிருப்பதாலும், பீஸ்ட், வாரிசு படங்களின் தோல்வியாலும் லியோ படத்தின் வெற்றி அவருக்கு இப்போது கட்டாயம் தேவைப்படுகிறது. தற்போதைய மோஸ்ட் வாண்டட் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குவதால் நிச்சயம் இந்தப் படம் வெற்றி பெறும் என விஜய் ரசிகர்கள் நம்புகின்றனர்.

லியோ ரிலீஸ்: படமானது அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாகிறது. ஷூட்டிங் சமீபத்தில்தான் முடிவடைந்ததாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார். மேலும் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியிருக்கும் விஜய் விரைவில் இந்தியாவுக்கு திரும்பி லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை முடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் நடக்கலாம் என தெரிகிறது.
ஆடியோ ரிலீஸ் எங்கே?: திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய ஊர்களில் ஏதேனும் ஒன்றில் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் தற்போது மலேசியாவில் ஆடியோ வெளியீட்டு விழா நடப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று தகவல் வெளியானது. ஆனால் வெளிநாட்டில் நடத்தினால் தமிழ் ரசிகர்களிடம் நெகட்டிவ் தாட் எழுந்துவிடும் என படக்குழு எண்ணுவதாகவும் அதன் காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
க்ளிம்ப்ஸ்: இதற்கிடையே லியோ படத்திலிருந்து சஞ்சய் தத் மற்றும் அர்ஜுன் ஆகியோரின் கதாபாத்திரம் தொடர்பான க்ளிம்ப்ஸ் காட்சிகள் ஜூலை மாதமும், ஆகஸ்ட் மாதமும் வெளியாகின. பட ரிலீஸுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே இருப்பதால் கண்டிப்பாக லியோவிலிருந்து அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனி அடிக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அப்டேட்டுகள்: படத்தின் முதல் சிங்கிள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற சூழலில் இந்த வாரத்துக்குள் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்றும் விரைவில் ட்ரெய்லரும் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. சூழல் இப்படி இருக்க இனி அடுத்தடுத்து அப்டேட்டுகள் வரும் என்று லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார்.
புதிய போஸ்டர்: அதன்படி லியோ படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது தெலுங்குக்காக வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த போஸ்டரில் காஷ்மீரில் விஜய் ரிலாக்ஸாக நடந்துவருவது போன்றும் ஓடி வருவது போன்றும் இருக்கிறது.மேலும் Keep The Calm And Avoid This Battle என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டர் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.


Click it and Unblock the Notifications











