Naa Ready: இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்.. அட்டகாசமாக வெளியானது லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் ப்ரோமோ!

சென்னை: லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "நான் ரெடி" பாடல் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் பரிசாக வரும் ஜூன் 22ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்போதே ரசிகர்களை அதற்காக தயார் படுத்தி உள்ளது படக்குழு.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடித்துள்ள லியோ படம் இந்த மாத இறுதியுடன் ஷூட்டிங்கை நிறைவு செய்கிறது.

இந்நிலையில், ஆல்டர் ஈகோ "நா ரெடி" என்கிற பாடல் வெளியாக உள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானதில் இருந்தே சோஷியல் மீடியா திரை தீப்பிடித்தது.

Leo Naa Ready first single promo out: Vijays unique voice mesmerizing

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டம்: நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் 22ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டு எந்தவொரு ட்ரீட்டும் இல்லை என சோஷியல் மீடியாவில் ஹேட்டர்கள் சில தகவல்களை பரப்பினர்.

ஆனால், எப்போதுமே தனது ரசிகர்களை கை விடமாட்டார் தளபதி என நம்பிக் கொண்டிருந்த நண்பா, நம்பிகளுக்கு அதிரடியாக "நா ரெடி" பாடல் விஜய்யின் பிறந்தநாளுக்கு வரும் என்கிற அறிவிப்பு வெளியானது.

Leo Naa Ready first single promo out: Vijays unique voice mesmerizing

நா ரெடி ப்ரோமோ: விஜய் பிறந்தநாளை முன்னிட்டு "நா ரெடி" பாடல் வெளியாக உள்ள நிலையில், இன்று மாலை கண்டிப்பாக அதன் அப்டேட் வரும் என காத்திருந்த ரசிகர்களுக்கு அதிரடியாக பாடலின் ப்ரோமோவையே சோனி மியூசிக் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது.

இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்: நான் ரெடி பாடல் ப்ரோமோவில் "இந்த பாடலை பாடியவர் உங்கள் விஜய்" என நாஸ்டால்ஜிக் எஃபெக்ட்டிலேயே போட்டு பட்டையை கிளப்பி உள்ளனர்.

நடிகர் விஜய் "நான் ரெடி வரவா.. அண்ணன் நான் இறங்கி வரவா.. தனியா வரவா..ன்னு" தாறுமாறான வரிகளில் அனிருத் இசையில் உருவான பாடலை அட்டகாசமாக பாடியுள்ளார்.

கொஞ்சம் பழைய பாடல் ஸ்டைலில் இந்த பாடல் உருவாகி இருப்பதாகவும் ரசிகர்கள் கருதுகின்றனர். 2000 டான்ஸர்களுடன் வேறலெவலில் நடனத்தில் விஜய் இந்த பாடலுக்கு ஆட்டம் போட்டு மிரட்டப் போவது உறுதி என தளபதி ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X