Leo: "அண்ணன் வரார் வழி விடு.. நான் ரெடி பாடல் வீடியோ..” லியோ டீம் கொடுத்த சூப்பர் அப்டேட்!
சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்த மாதம் வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களுடன் 600 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது.
இந்நிலையில் லியோ திரைப்படம் அடுத்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனையடுத்து ரசிகர்களுக்கு லியோ வைப் கொடுக்கும் விதமாக நான் ரெடி பாடலின் முழுமையான வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளது.

அண்ணன் வரார் வழி விடு
மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லியோ கடந்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. பான் இந்தியா படமாக வெளியான லியோ, உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூல் செய்துள்ளது.
தீபாவளி ரிலீஸுக்குப் பின்னரும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது லியோ. இதனையடுத்து அடுத்து வாரம் நெட்பிளிக்ஸ் தளத்திலும் வெளியாகவுள்ளது. லியோ படத்தை திரையரங்குகளில் மிஸ் செய்த ரசிகர்கள் ஓடிடியில் பார்க்க காத்திருக்கின்றனர். இதனால் லியோவுக்கு அடுத்தக்கட்ட ப்ரொமோஷன் தொடங்கியுள்ளது.
ரசிகர்களுக்கு லியோ வைப் கொடுக்கும் விதமாக, நான் ரெடி பாடலின் முழு வீடியோவை படக்குழு வெளியிடவுள்ளது. அதன்படி நான் ரெடி பாடலின் முழுமையான வீடியோ நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியான நான் ரெடி பாடலை விஜய் பாடியிருந்தார். அனிருத் இசையில் பெப்பியாக உருவாகியிருந்த இந்தப் பாடலுக்கு, 2000 குரூப் டான்ஸர்களுடன் செம்ம குத்தாட்டம் போட்டிருந்தார் விஜய்.
ஆனால், படம் வெளியான போது, அதில் விஜய்யுடன் மடோனா செபாஸ்டியன், அர்ஜுன், மன்சூர் அலிகான் ஆகியோரும் ஆட்டம் போட்டு மாஸ் காட்டியிருந்தனர். நான் ரெடி பாடலை தியேட்டரில் ரசிகர்கள் விசில் போட்டு தெறிக்கவிட்டனர். இந்நிலையில் நாளை காலை 11 மணிக்கு நான் ரெடி பாடலின் முழு வீடியோ வெளியாகவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
முன்னதாக நான் ரெடி பாடலில் இடம்பெற்றிருந்த சில வரிகள் சர்ச்சையானது. சிகரெட் பிடிப்பது, மது அருந்துவதை உற்சாகப்படுத்துவதாக வரிகள் இருந்தன. இதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கத் தொடரப்பட்டு, பின்னர் அவைகள் நீக்கப்பட்டது. அதற்கு லியோ சக்சஸ் மீட்டில் விஜய் விளக்கம் கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











