அஜித்துக்கு பின்னாடியே லியோ.. ஃபுட்பால் உடன் மகன்.. இதுக்கு மேல ஒரு வெயிட்டான பிக் இருக்க முடியுமா?

சென்னை: நடிகர் அஜித் குமார் வெளிநாட்டு டூர் முடித்து விட்டு சென்னைக்கு திரும்பிய நிலையில், மகனின் கால்பந்தாட்ட ஆர்வத்தை கண்டு ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

முன்னதாக மகனுடன் கால்பந்தாட்ட நிகழ்ச்சிக்கு ஷாலினி சென்ற போட்டோவை ஷேர் செய்திருந்தார்.

இந்நிலையில், அப்பா அஜித், அம்மா ஷாலினி உடன் க்யூட்டான குட்டி தல ஆத்விக் இருக்கும் அழகான குடும்ப புகைப்படமும் அதற்கு பின்னாடி இருக்கும் சூப்பரான விஷயமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

பிகிலாக மாறும் அஜித் மகன்

பிகிலாக மாறும் அஜித் மகன்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீரராக விஜய் நடித்திருப்பார். இந்நிலையில், நடிகர் அஜித்தின் மகன் கால்பந்தாட்டத்தில் தனது அதிகமான ஆர்வத்தை சமீப காலமாக காட்டி வரும் நிலையில், அம்மா ஷாலினி அடிக்கடி மகனுடன் கால்பந்தாட்ட மைதானங்களுக்கு சென்று வரும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி வருகிறார்.

அஜித் ரிட்டர்ன்ஸ்

அஜித் ரிட்டர்ன்ஸ்

ஷூட்டிங் ஆரம்பிக்கவில்லை என்றாலோ ஷூட்டிங் சற்று தாமதம் ஆனாலோ தனது பேஷனான பைக் ரைடிங்கிற்கு வெளிநாடுகளுக்கு தனது டீம் உடன் பறந்து விடுகிறார் நடிகர் அஜித். இந்நிலையில், ஏகே 62 படத்தை விரைவில் ஆரம்பிப்பதற்காக சென்னை வந்துள்ள நடிகர் அஜித் தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

மகன் மற்றும் மனைவியுடன்

மகன் மற்றும் மனைவியுடன்

அம்மா மட்டுமே ஆத்விக்கின் கால்பந்தாட்ட போட்டிகளுக்கு சென்று வரும் நிலையில், தற்போது சென்னை திரும்பியுள்ள நடிகர் அஜித் தனது மகன் ஆத்விக் உடன் கால்பந்தாட்ட பயிற்சி மைதானத்தில் எடுத்துக் கொண்ட சூப்பரான புகைப்படத்தை நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

அஜித்துக்கு பின்னாடி லியோ

அஜித்துக்கு பின்னாடி லியோ

நடிகர் அஜித்துக்கு பின்னாடி அப்படியே பேக்கிரவுண்டில் லியோ எனும் வார்த்தை இடம்பெற்றிருப்பதை பார்த்த விஜய் ரசிகர்கள் வாவ் ஒரே போட்டில் அஜித்தும் லியோவும் இருக்காங்களே என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் அஜித்துக்கு பின்னாடி தான் எப்பவும் உங்க லியோ என அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வம்பிழுத்து வருகின்றனர்.

அறிவிப்பு வருதோ இல்லையோ

அறிவிப்பு வருதோ இல்லையோ

ஏகே 62 படத்தின் அறிவிப்பு வருதோ இல்லையோ தொடர்ந்து அஜித்தின் போட்டோக்கள் வெளியாகி அஜித் ரசிகர்களை கொஞ்சமாவது சந்தோஷப்படுத்த ஷாலினி அஜித் தொடர்ந்து போராடி வருகிறார் என விஜய் ரசிகர்கள் பதிலுக்கு ட்ரோல் செய்து வருகின்றனர். ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் ஏகே 62 அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X