Leo: ‘லியோ’ திரைக்கதைக்கு புத்தகம் வேறயா... லோகேஷ் சார் இது நியாயமா..? வச்சு செய்த நெட்டிசன்கள்!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் கடந்தாண்டு வெளியான லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்தப் படத்தின் இரண்டாம் பாதி திரைக்கதை சொதப்பி விட்டதாக நெட்டிசன்கள் விமர்சனம் செய்திருந்தனர். லியோ திரைக்கதையை லோகேஷ் கனகராஜ் புத்தகமாக வெளியிட்டதை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
லியோ திரைக்கதைக்கு புத்தகம் வேறயா
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் கடந்தாண்டு அக்டோபர் மாதம் வெளியானது. மாஸ்டரை தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் கூட்டணி இணைந்ததால் 'லியோ' படம் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி, மேத்யூ தாமஸ் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே இதில் நடித்திருந்தது.

அதேபோல், கைதி, விக்ரம் படங்களின் வரிசையில் லியோவும் லோகேஷின் LCU-ன் கீழ் உருவாகியிருந்தது. இதனால் லியோ படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தப் படம் ஆயிரம் கோடி வசூலிக்கும் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால், படம் வெளியான முதல் நாள் மட்டும் சிறப்பான ஓபனிங் கிடைத்தது. அதன்படி லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் 148 கோடி வரை வசூல் செய்தது.
அதன்பின்னர் விமர்சன ரீதியாகவும் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் லியோவுக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்தது. முதல் பாதியில் ஓகே ரகமாக இருந்த லியோ, இரண்டாம் பாதியில் மொத்தமாக சொதப்பிவிட்டது. முக்கியமாக திரைக்கதை படுமோசம் என நெட்டிசன்கள் விமர்சித்திருந்தனர். மாநகரம், கைதி, விக்ரம் படங்களின் திரைக்கதை தான் லோகேஷை திரும்பிப் பார்க்க வைத்தது. ஆனால், லியோ திரைக்கதை ரசிகர்களுக்கு ஏமாற்றம் ஆகிவிட்டது.
ஒருகட்டத்தில் லோகேஷே லியோ இரண்டாம் பாதி திரைக்கதை சரியாக வரவில்லை என்பதை ஒப்புக்கொண்டார். இந்நிலையில், லியோ படத்தின் திரைக்கதையை புத்தகமாக வெளியிட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். சென்னையில் தொடங்கிய 47வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில் லியோ திரைக்கதை புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது. அதேபோல், கைதி, மாஸ்டர் படங்களின் திரைக்கதை புத்தகமும் சென்னை புத்தகக் கண்காட்சியில் விற்பனையாகி வருகிறது.
இதனை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். லியோ திரைக்கதை சரியாக வரவில்லை என லோகேஷே ஒப்புக் கொண்டார். அப்படியிருந்தும் லியோ திரைக்கதை என புத்தகம் வெளியாகியுள்ளது பெரிய மோசடி என விமர்சித்து வருகின்றனர். "Book of the year... லோகியே 2nd half சரியாக எழுதவில்லை என்று சொல்லி இருக்காப்ல.. ஓ எப்படி எழுதக் கூடாது என்று இருக்குமோ.." என சினிமா சோஷியல் மீடியா ட்ராக்கர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார். இதேபோல், பலரும் திரைக்கதை எப்படி இருக்கக் கூடாது என்பதற்கான புத்தகமாக இது இருக்குமோ என லோகேஷ் கனகராஜ்ஜை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











