Leo: “லியோவா பார்த்தியா..? ஒரு DNA டெஸ்ட் போதும்..” தெறிக்கவிட்ட பாரதி கண்ணம்மா சீரியல் மீம்ஸ்!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.
இந்தப் படம் ரஜினியின் பாட்ஷா டைப் கதை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
விஜய் லியோவா அல்லது பார்த்திபனா என்பது தான் படத்தின் மைய கதையாக இருந்தது.
அதனை ஒரு DNA டெஸ்ட் எடுத்து கண்டுபிடித்திருக்கலாம் என பாரதி கண்ணம்மா சீரியல் மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர்.

லியோவை தெறிக்கவிட்ட மீம்ஸ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம், கடந்த வாரம் வெளியானது. விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர். விஜய் - லோகேஷ் கூட்டணியில் முதல் LCU படமாக வெளியான லியோ, எதிர்பார்த்தளவில் வரவேற்பைப் பெறவில்லை.
கதை, திரைக்கதை, மேக்கிங் எதிலும் லோகேஷ் கனகராஜ்ஜின் மேஜிக் எடுபடவில்லை என ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர். குடும்பத்துடன் வாழ்ந்து வரும் விஜய், பார்த்திபன் இல்லை லியோ தான் என சஞ்சய் தத்தும் அர்ஜுனும் கண்டுபிடிப்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். இதன் பின்னணியில் போதைப் பொருள் கடத்தல், நரபலி என மசாலா ஃப்ரைட் ரைஸ்ஸாக இந்தப் படத்தை இயக்கியிருந்தார் லோகேஷ்.
செத்துப் போனதாக சொல்லப்பட்ட லியோ, உயிரோடு இருப்பது தெரிந்ததும், தெலங்கானாவில் இருக்கும் சஞ்சய் தத் தனது கும்பலுடன் காரில் இமாச்சல் பிரதேசத்துக்கு பறப்பார். அங்கே சென்று விஜய்யை 'நீ தான் லியோ... நீயே அந்த உண்மையை ஒத்துக்கோ... திரும்பவும் என்கூடவே வந்துடு.." என மிரட்டிக் கொண்டிருப்பார். ஆனால், விஜய்யோ "நான் லியோ இல்ல, பார்த்திபன் தான்... எனக்கு லியோன்னு யாரையும் தெரியாது.." என ரிப்பீட் மோடில் பதில் கூறுவார்.
ஒருகட்டத்தில் த்ரிஷாவிடம் பயங்கர எமோஷனலாக நான் லியோ இல்லை எனக் கூறி கண்ணீரே வடித்துவிடுவார். அதேபோல், த்ரிஷாவும் விஜய்யின் ஹிஸ்டரியைத் தேடி அலைந்துகொண்டிருப்பார். ஆகமொத்தம் விஜய் பார்த்திபனா அல்லது லியோவா என கண்டுபிடிப்பதை பின்னணியாக வைத்து தான் மொத்த கதையும் நகரும். இதனை மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளனர் நெட்டிசன்கள்.

அதாவது, "ஒரு DNA டெஸ்ட் எடுத்திருந்தா லியோவா இல்ல பார்த்தியான்னு தெரிஞ்சிருக்கும். இத நான் சொல்லல, பாரதி கண்ணம்மா சீரியல் ஃபேன்ஸ் பேசிட்டு இருந்தாங்க" என பரிதாபங்கள் கோபி, சுதாகர் டெம்ப்ளேட்டில் மீம்ஸ் போட்டுள்ளனர். அட இதுவும் சரிதான, இதெல்லாம் லோகேஷ் யோசிக்கவே இல்லையா என நெட்டிசன்களும் லியோ படத்தை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











