Leo North India Box Office: சஞ்சய் தத் இருந்தும் கேஜிஎஃப் 2 போல வடக்கில் சாதிக்காத லியோ.. ஏன்?

சென்னை: லியோ படத்தை பான் இந்தியா படமாக மாற்றுவேன் என்கிற உறுதியுடன் லலித் குமார் ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை கடைசியில் காட்டவே இல்லை. கேஜிஎஃப் 2வில் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தை வில்லனாக லியோவில் களமிறக்கியும் இந்தியில் அந்த படம் முதல் நாளில் சொல்லிக் கொள்ளும்படியான வசூலை ஈட்டவில்லை.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படமும் தென்னிந்தியா மற்றும் ஓவர்சீஸில் வசூல் ஈட்டிய நிலையில், பாலிவுட்டில் பெரிதாக போகவில்லை.

Leo North India Box Office is not upto the mark like KGF 2 or Pushpa

அதை விஜய்யின் லியோ மாற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னமும் விஜய்க்கான மவுசு இந்தி பெல்ட்டில் இல்லை என்று தான் தெரிகிறது.

தென்னிந்தியாவில் டாப்: தமிழ்நாட்டில் முதல் நாளில் லியோ திரைப்படம் 30 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாகவும், கர்நாடகாவில் 14 கோடி ரூபாய், கேரளாவில் 11 கோடி ரூபாய், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 15 கோடி ரூபாயும் வசூல் செய்து தென்னிந்தியாவில் தனது கெத்தை நடிகர் விஜய் நிரூபித்து இருக்கிறார். பல இடங்களிலும் அதிகாலை 4 மணிக்கே விஜய் படத்தை பார்க்க ரசிகர் கூட்டம் முண்டியடித்ததையும் டிக்கெட் டிமாண்டையும் பார்க்க முடிந்தது.

இந்தி பெல்ட்டில் குறைவு: ஆனால், இந்தி பெல்ட்டில் லியோ திரைப்படம் முதல் நாளில் வெறும் 4 கோடி ரூபாய் வசூலை மட்டுமே அள்ளி இருக்கிறது. மிகப்பெரிய வசூல் வேட்டையை லியோ படத்தால் பாலிவுட்டில் செய்ய முடியவில்லை. வட இந்தியா முழுவதும் கேஜிஎஃப் 2, புஷ்பா, பாகுபலி உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் செய்த வசூல் மேஜிக்கை லியோவால் ஏன் செய்ய இயலவில்லை என்கிற கேள்வி எழுந்துள்ளது.

சஞ்சய் தத் இருந்தும்: படத்தின் கதை காஷ்மீர் மற்றும் படத்தில் கேஜிஎஃப் 2வில் நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் இருந்தும் லியோ படத்தால் வட இந்திய ரசிகர்களை கவர முடியவில்லை. லோகேஷ் கனகராஜின் அதிரடி ஆக்‌ஷன் ஸ்க்ரீன்பிளே இருந்தும் விஜய் வெறித்தனமாக சண்டை போட்டும் அதிகப்படியான வசூலை அங்கே பெற முடியவில்லை என்பது தான் நிதர்சனம்.

புரமோஷன் பிரச்சனை: லியோ இந்தியில் மிகப்பெரிய வசூலை ஈட்டியிருக்கும். ஆனால், நடிகர் விஜய் ஒருமுறையாவது வட இந்தியாவுக்கு சென்று ஒரு ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தனது படத்தை ரசிகர்கள் மத்தியில் புரமோட் செய்திருந்தால் கண்டிப்பாக பாலிவுட்டிலும் லியோவுக்கு நல்ல ஓபனிங் இருந்திருக்கும் எனக் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X