Leo joins LCU: லியோ எல்சியூ தான்.. அந்த காட்சியை டிரெண்ட் செய்யும் ஃபேன்ஸ்.. வீடியோவையே போட்டாச்சு!

சென்னை: லியோ படத்தின் பட பூஜையில் அந்த நடிகரை பார்த்த போதே லியோ எல்சியூ தான் என ரசிகர்கள் உறுதி செய்த நிலையிலும், கடைசி வரை லோகேஷ் கனகராஜ் ரிவீல் செய்யாமல் வைத்திருந்த எல்சியூ மேட்டரை உதயநிதி ஸ்டாலின் செதற தேங்காயை போட்டு உடைப்பது போல உடைத்து அம்பலப்படுத்தி விட்டார்.

அது பக்கத்துல அவர் போட்ட கண்ணடிக்கிற எமோஜியை பார்க்கலையா என லோகி முட்டுக் கொடுக்க நினைத்தாலும் ரசிகர்கள் யாரும் அதை நம்பத் தயாராக இல்லை.

Leo officially joins LCU and fans shares the connection scene in social media

இந்நிலையில், லியோ படத்தின் ஆரம்ப காட்சியிலேயே அந்த படம் எல்சியூவில் இணைந்த காட்சிகள் வெளியாகி ரசிகர்களை கூஸ்பம்ப்ஸ் அடைய செய்துள்ளன.

தளபதி டைட்டில் கார்டு: நடிகர் விஜய்யை காட்டும் போதே ஹைனா காட்சி தான். அந்த ஒரு சீனிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் விஜய் கவர்ந்த நிலையில், மார்வெல் டைப்பில் விஜய்யின் முகங்களுடன் வரும் தளபதி விஜய் டைட்டில் தாறுமாறாக அமைய சட்டையை கழட்டிக் கொண்டு உள்ளே நுழைகிறார்.

Leo officially joins LCU and fans shares the connection scene in social media

லியோ எல்சியூ காட்சி: இது 100 சதவீதம் லோகேஷ் படம் என்பதால் எல்சியூவில் இணைத்து விட்டார் லோகி. ஆரம்பத்திலேயே நடிகர் விஜய்யை கைதி படத்தில் இடம்பெற்ற நெப்போலியன் கதாபாத்திரம் வந்து சந்திப்பதும், தளபதி விஜய்யிடம் கைதி படத்தின் கிளைமேக்ஸில் போதைப் பொருளை பிடித்த போலீஸ் என அறிமுகம் ஆவதும், விஜய் அவரை ஏற இறங்க பார்க்கும் காட்சிகளையும் தற்போது ரசிகர்கள் இணையத்தில் தீயாக ஷேர் செய்து வருகின்றனர்.

கிளைமேக்ஸில் சர்ப்ரைஸ்: எல்சியூ கனெக்ட்டில் லியோ இடம்பெற்ற நிலையில், அடுத்த ஆள் எப்போது வருவார் என ரசிகர்கள் ஒரு பக்கம் எதிர்பார்ப்பை கிளப்ப, பக்கா லியோ படம் ஓடுகிறது. கிளைமேக்ஸில் ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே செம சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

Leo officially joins LCU and fans shares the connection scene in social media

தியேட்டர் தெறிக்குது: ஒரு சில மாஸ் காட்சிகளை மட்டுமே வைத்து லியோ படத்தை உருவாக்காமல் படத்தையே மாஸ் காட்சிகளின் கட்டமைப்பாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கி அந்த சிம்மாசனத்துக்கு நான் தகுதியானவன் தான் என்பதை நடிகர் விஜய் தனது நடிப்பால் மிரட்டி இருக்கிறார். தியேட்டரில் ஒவ்வொரு காட்சியும் பிகில் சத்தத்தோடு சும்மா அதிருது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X