Leo: லியோ இசை வெளியீட்டு விழா இல்ல... இது விஜய் மக்கள் இயக்கம் மாநாடு... பிரபலங்களுக்கு நோ என்ட்ரி!

சென்னை: விஜய்யின் லியோ இசை வெளியீட்டு விழா இந்த மாதம் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது.

படக்குழு தரப்பில் இருந்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில், அடுத்தடுத்து புதிய அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

முக்கியமாக இந்த விழாவில் சினிமா பிரபலங்கள் யாருக்கும் அனுமதி இல்லை என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

 Leo: Only Vijay Makkal Iyakkam executives are allowed at the Leo audio launch

சினிமா பிரபலங்களுக்கு நோ என்ட்ரி: விஜய்யின் நடிப்பில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா, செப்டம்பர் 30ம் தேதி நடைபெறும் என சொல்லப்படுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ள இந்த இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆனால், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பொதுவாக திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் முன்னணி நடிகர்கள், முக்கியமான பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்வது வழக்கம். ஆனால், லியோ இசை வெளியீட்டு விழாவில் இந்த சீன் எல்லாம் இல்லையாம்.

அதேபோல், ரசிகர்களுக்கும் பெரிதாக அனுமதி இருக்காது என்றே செய்திகள் வெளியாகின்றன. அதாவது முழுக்க முழுக்க விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே கலந்துகொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது. நேரு ஸ்டேடியத்தில் 6000 பேர் வரை மட்டும் நிகழ்ச்சியை காண முடியும் என்பதால், ரசிகர்களுக்கும் அனுமதி கிடைப்பது சந்தேகம் தானாம். லியோ படக்குழுவினரும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் மட்டுமே இதில் கலந்துகொள்ள உள்ளார்களாம்.

சில தினங்களுக்கு முன்னர் பனையூரில் உள்ள மக்கள் இயக்க அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்துள்ளார் விஜய். அப்போது லியோ இசை வெளியீட்டு விழா பற்றிதான் ஆலோசனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. விஜய் வழக்கமாக குட்டி ஸ்டோரியுடன், தனது அரசியல் என்ட்ரி குறித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், பத்திரிகைகளுக்கும் அனுமதி இல்லை எனத் தெரிகிறது.

லியோ இசை வெளியீட்டு விழாவுக்காக காத்திருந்த விஜய் ரசிகர்கள், தற்போது தங்களுக்கு அனுமதி கிடைக்காது என்ற ஏமாற்றத்தில் உள்ளனர். அதேநேரம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அதிக ஆர்வத்துடன் ரெடியாகி வருகிறார்களாம். முக்கியமாக லியோ இசை வெளியீட்டு விழாவில், விஜய் மக்கள் நிர்வாகிகளுக்கு மட்டுமே அனுமதி கிடைக்கும் என்றும், தொண்டர்கள் கூட உள்ளே செல்வது கடினம் என்றே சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X