Leo Poster: விஜய்யின் லியோ போஸ்டரில் KGF யாஷ்... தளபதிக்கே டஃப் கொடுத்த ராக்கி பாய்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.

லியோ வெளியாக இன்னும் 4 வாரங்களே உள்ளதால், அடுத்தடுத்து போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.

நேற்று வெளியான லியோ போஸ்டரில், விஜய்க்கு டஃப் கொடுக்கும் வகையில் கேஜிஎஃப் யாஷ் மிரட்டியுள்ளது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

 Leo poster: KGF Yash in Vijays Leo poster is trending now

லியோ போஸ்டரில் மிரட்டும் யாஷ்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. மாஸ்டர் வெற்றியைத் தொடர்ந்து, லியோவும் இந்தக் கூட்டணிக்கு வெற்றியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யுடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் என பலரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த நான்கு தினங்களாக லியோ படத்தின் அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. அதன்படி விஜய்யின் போஸ்டரை, தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிகளில் வெளியிட்டது படக்குழு. நேற்று வெளியான லியோ போஸ்டரில், "KEEP CALM AND PREPARE FOR BATTLE" என்ற கேப்ஷனுடன், "மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து" என குறிப்பிடப்பட்டிருந்தது.

முக்கியமாக இந்த போஸ்டரில் விஜய்யின் லுக் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக அமைந்தது. ஆக்‌ஷனில் வெறித்தனம் காட்டுவதாக விஜய் மிரட்டியிருந்தார். இதனால் லியோ போஸ்டரை விஜய் ரசிகர்கள் தொடந்து ட்ரெண்ட் செய்து வந்தனர். ஆனால், அவர்களுக்கே விபூதி அடிக்கும் விதமாக இன்னொரு போஸ்டர் இணையத்தையே தெறிக்கவிட்டுள்ளது. லியோ போஸ்டரின் ஃபேன்மேட் வெர்ஷனான அதில், விஜய்க்குப் பதிலாக கேஜிஎஃப் ஹீரோ யாஷ் இடம்பெற்றுள்ளார்.

 Leo poster: KGF Yash in Vijays Leo poster is trending now

கன்னடத்தில் வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த கேஜிஎஃப் படத்தில், யாஷ் ஹீரோவாக நடித்திருந்தார். தாறுமாறான கேங்ஸ்டர் படமாக வெளியான கேஜிஎஃப், பான் இந்தியா அளவில் மெஹா ஹிட் அடித்தது. இந்த ஒரே படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் யாஷ். ராக்கி பாய் என்ற கேரக்டரில் யாஷ் காட்டிய ஹீரோயிசம், முன்னணி நாயகர்களையே மிரள வைத்தது.

இந்த நிலையில் தான், லியோ போஸ்டரில் விஜய்க்குப் பதிலாக, ராக்கி பாய் யாஷ் போட்டோவை டிசைன் செய்து நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரியல் பீஸ்ட் என்ற கேப்ஷனில் ட்ரெண்டாகும் இந்த போஸ்டர், விஜய்யின் ஒரிஜினல் லியோ போஸ்டருக்கு டஃப் கொடுத்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், லியோ போஸ்டரில் யாஷ் தான் சூப்பராக இருக்கிறார் என கமெண்ட்ஸ் போட்டு, விஜய் ரசிகர்களை கடுப்பாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X