Leo Poster: “ரியல் லியோவாக மாறிய விஜய்..” இந்தி போஸ்டரில் சஞ்சய் தத் சம்பவம் லோடிங்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையடுத்து லியோ படத்தில் இருந்து அடுத்தடுத்து போஸ்டர்களை வெளியிட்டு படக்குழு சர்ப்ரைஸ் கொடுத்து வருகிறது.

இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியான நிலையில், தற்போது இந்தி போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதில் விஜய் - சஞ்சய் தத் இருவரும் மோதிக்கொள்ளும் ஆக்ரோஷமான ஸ்டில், ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்துள்ளது.

 Leo poster: Vijays Leo film Hindi poster released now

லியோ இந்தி போஸ்டர் வெளியானது: விஜய்யின் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படமாக லியோ காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் விஜய்யுடன் லோகேஷ் இணைவது இது இரண்டாவது முறையாகும். அதுமட்டும் இல்லாமல் லோகேஷின் யுனிவர்ஸில் லியோ இணைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முக்கியமாக பாலிவுட் லீடிங் ஸ்டார் சஞ்சய் தத், லியோவில் நடித்துள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஹெரால்டு தாஸ் கேரக்டரில் நடித்துள்ளதும், அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்பெஷல் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் கொடுக்கும் வேலையை படக்குழு தொடங்கியுள்ளது. அதன்படி, கடந்த மூன்று தினங்களாக லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டரை படக்குழு வெளியிட்டு வருகிறது. தெலுங்கு, கன்னட போஸ்டர்கள் வெளியானதைத் தொடர்ந்து, நேற்று தமிழ் போஸ்டர் வெளியிடப்பட்டது. "KEEP CALM AND PREPARE FOR BATTLE" என்ற கேப்ஷனுடன், "மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து" என தமிழ் போஸ்டர் வெளியானது.

 Leo poster: Vijays Leo film Hindi poster released now

அதனைத் தொடர்ந்து தற்போது லியோ இந்தி போஸ்டர் வெளியாகியுள்ளது. "KEEP CALM AND FACE THE DEVIL, Witness the ultimate face-off on October 19th" என்ற கேப்ஷனுடன் வெளியான இந்த போஸ்டரில், இன்னொரு சர்ப்ரைஸ்ஸையும் லியோ டீம் இணைத்துள்ளது. அதாவது சஞ்சய் தத்தின் கழுத்தை பிடித்தபடி, விஜய் ஆக்ரோஷமாக மோதுவதாக இந்த போஸ்டர் உருவாகியுள்ளது.

இதுவரை வெளியான லியோ போஸ்டரில், விஜய்யின் புகைப்படங்கள் மட்டும் இடம்பெற்றன. ஆனால் இந்தி போஸ்டரில் சஞ்சய் தத்துடன் விஜய் மோதுவதாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் ரசிகர்களை குறிவைக்கும் விதமாக, சஞ்சய் தத்தை இந்த போஸ்டரில் வர வைத்தது குறிப்பிடத்தக்கது. மிரட்டலாக வெளியாகியுள்ள இந்த போஸ்டரை, விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X