Leo: லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் சிக்கல்..? படக்குழு கொடுத்த விளக்கம்!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த படக்குழு ரெடியாகிவிட்டது.

அதன்படி, வரும் 30ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடக்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், ரெட் ஜெயன்ட் நிறுவனத்தால் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு சிக்கல் என்ற தகவல் குறித்து, படக்குழுவினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

 Leo: Producer explains that there is no problem with Leo audio launch

லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு சிக்கல்?: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம், அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. இதனையடுத்து லியோவில் இருந்து அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழா பற்றிய செய்திகளும் வைரலாகி வருகின்றன.

அதன்படி, லியோ படத்தின் ஆடியோ லான்ச், வரும் 30ம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை. அதாவது நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடத்துவதற்கான அனுமதி கிடைக்கவில்லை எனவும், இதற்கு ரெட் ஜெயன்ட் நிறுவனம் தான் காரணம் என்றும் செய்திகள் வெளியானது.

இந்தத் தகவலை சவுக்கு சங்கர் என்பவர் தனது டிவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். அதாவது சென்னை, தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்கான லியோ தியேட்டர் ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கேட்டதாகவும், அதற்கு விஜய் தரப்பில் இருந்து முடியாது என சொல்லப்பட்டதாகவும், சவுக்கு சங்கர் கூறியுள்ளார். அதனால் தான் நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த செய்தி இணையத்தில் வைரலானதை அடுத்து, லியோ படக்குழுவினர் இதற்கு விளக்கம் கொடுத்துள்ளனர். 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் டிவிட்டர் பக்கத்தில் சவுக்கு சங்கரின் பதிவை பகிர்ந்து, "இந்த செய்தி உண்மையில்லை" என விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது லியோ தியேட்டர் ரைட்ஸ் விசயத்தில், ரெட் ஜெயன்ட் எதுவும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான அனுமதி கிடைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லையென்றும் தெரிவித்துள்ளது.

லியோ இசை வெளியீட்டு விழா குறித்த சர்ச்சைகளுக்கு, தற்போது படக்குழுவே விளக்கம் கொடுத்துள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதேபோல், விரைவில் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X