Vijay Salary - எல்லாத்துக்கும் காரணம் அவர்தான்..விஜய் சம்பள உயர்வுக்கு பின்னால் இருப்பவர் யார் தெரியுமா?
சென்னை: Vijay Salary (விஜய் சம்பளம்) விஜய்யின் சம்பள உயர்வுக்கு காரணமே லியோ படத்தின் தயாரிப்பாளர்தான் என தகவல் வெளியாகியிருக்கிறது.
வாரிசு படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார் விஜய். அனிருத் இசையமைப்பில் லலித் தயாரித்துவருகிறார். த்ரிஷா, சஞ்சய் தத், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துவருகின்றனர். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னையில் நடந்துவருகிறது. அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.

விஜய்யின் அடுத்த படம்: லியோ படத்தை முடித்த பிறகு விஜய் அடுத்து யார் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே எழுந்தது. விஜய்யை அடுத்தது தெலுங்கு இயக்குநர் இயக்குவார் என்றும் ஆர்.பி.சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல் வெளியானது. ஆனால் சூப்பர் குட் பிலிம்ஸ் ஓகேதான் தெலுங்கு இயக்குநருடன் மீண்டும் தளபதி விஜய் இணைவதில் தங்களுக்கு உடன்பாடில்லை என ரசிகர்கள் கூறினர்.
வெங்கட் பிரபுவை டிக் செய்த விஜய்: இந்தச் சூழலில் கடந்த சில வாரங்களாக விஜய் படத்தை அடுத்து யார் இயக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் ஒரு ஹாட் டாபிக் ஓடிக்கொண்டிருந்தது. வெங்கட் பிரபு விஜய்யின் அடுத்த படத்தை இயக்குகிறார் என்று வெளியான அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் அந்தப் படத்தின் கதையை கஸ்டடி ரிலீஸுக்கு முன்னதாகவே விஜய்யிடம் வெங்கட் பிரபு சொல்லிவிட்டதாகவும் அந்தக் கதையை இப்போது விஜய் டிக் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
விஜய் சம்பளம் எவ்வளவு: இதனையடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கூறப்பட்ட சூழலில் விஜய் அந்தப் படத்துக்காக 200 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார் என தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்திதான், லியோவுக்கு 130 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றிருக்கிறார். அந்தத் தொகையிலிருந்து கூடுதலாக 5 கோடி பெறுவார் என்று பேசப்பட்டது.
175 கோடி ரூபாய்: ஆனால் சமீபத்திய தகவல்படி, ஏஜிஎஸ் நிறுவனம் சார்பாக விஜய்யிடம் சம்பளம் குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாகவும், அதில் தயாரிப்பு தரப்பே விஜய்க்கான சம்பளத்தை 175 கோடி ரூபாயிலிருந்து ஆரம்பித்ததாக கூறப்பட்டது. அதேபோல் இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு10 கோடி ரூபாய் சம்பளத்தை தர முன் வந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

லலித்தான் காரணம்: இந்நிலையில் விஜய்யின் இந்த சம்பள உயர்வுக்கு காரணம் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்தான் என கூறப்படுகிறது. அதாவது லியோ படத்தின் ஷூட்டிங்கே இன்னும் முடியாத சூழ்நிலையில் படம் இதுவரை 400 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வியாபாரம் ஆகியிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது.
ரிலீஸுக்கு முன்னதாகவே இவ்வளவு வியாபாரம் ஆகியிருப்பதால் விஜய் தனது சம்பளத்தை யோசிக்காமல் ஏற்றிவிட்டார். மேலும் தயாரிப்பு நிறுவனங்களும் லியோவின் பிஸ்னெஸால்தான் 200 கோடி ரூபாய்வரை கொடுக்க முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











