தனஞ்செயனுக்கு அந்த காண்டு தான்.. திருப்பூர் சுப்பிரமணியம் பேச்சுக்கும் பதிலடி கொடுத்த லலித் குமார்!
சென்னை: லியோ படம் ரிலீஸ் ஆகி 500 கோடி வசூலை நெருங்கி வரும் நிலையில், ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு லலித் குமார் பேட்டியளித்து அனைத்துக்கும் பதிலடி கொடுத்துள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியம் ஏன் பொய்யாக 80 சதவீதம் ஷேர் தயாரிப்பாளர் கேட்கிறார் என எப்படி சொல்லலாம் என விளாசிய லலித் குமார், தனஞ்செயன் இப்படி பேசுவதற்கு அந்த காண்டு தான் காரணம் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

461 கோடி வசூல் உண்மை: பொய்யான பாக்ஸ் ஆபிஸ் நம்பர் சொல்ல வேண்டும் என எனக்கு எந்த தலையெழுத்தும் இல்லை அப்படி பொய்யாக சொல்ல வேண்டும் என்றால் எவ்வளவோ சொல்லலாமே, தோல்வி படமே வராதே.. கோப்ரா எனக்கு தோல்வி படம் தான். ஆனால், லியோ 461 கோடி ரூபாய் வசூல் செய்தது உண்மை என லலித் குமார் சத்தியம் செய்யாத குறையாக அடித்துக் கூறி ஹேட்டர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தனஞ்செயனுக்கு அந்த காண்டு: தயாரிப்பாளர் தனஞ்செயன் ஜெய்யை வைத்து ஒரு படம் பண்ணி வரும் நிலையில், அந்த படத்தை என் மூலமாக ரிலீஸ் செய்ய கோரிக்கை வைத்தார். இப்போதைக்கு என்னால் பண்ண முடியாது என சொல்லி விட்டேன். அந்த கடுப்பில் தான் இப்படி தப்பு தப்பாக பொய்யான தகவலை பேசி வருகிறார். அவரது லெவலுக்கு கீழே இறங்கி இப்படி பேசி வருவதால் என்ன லாபம் என்றே எனக்கு தெரியவில்லை என பதில் அளித்துள்ளார்.
திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு பதிலடி: சென்னைக்கு ஒரு மீட்டிங்கிற்காக வந்த திருப்பூர் சுப்பிரமணியத்துக்கு அன்றைக்கு மீட்டிங் கேன்சல் உடனே எல்லா யூடியூப் சேனலையும் அழைத்து லியோ பற்றி தப்புத் தப்பா பேட்டிக் கொடுத்துள்ளார். அவர் பேசிய ஒவ்வொரு பேட்டியிலும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் இருக்கும் என்பதை கவனித்தால் தெரியும் என திருப்பூர் சுப்பிரமணியம் சொன்னதும் பொய் தான் என ஒரே போடாக போட்டுள்ளார்.

ஐமேக்ஸ் வசூல் 40 கோடி: லியோ படம் முதல் நாளே இத்தனை பெரிய கலெக்ஷனை அள்ள காரணமே ஐமேக்ஸில் படத்தை வெளியிட்டது தான். அதன் மூலமாகவே 7 நாட்களில் உலகம் முழுவதும் சுமார் 40 கோடி வசூல் கிடைத்தது. இனி வரும் பெரிய படங்கள் எல்லாம் ஐமேக்ஸை டார்கெட் செய்து உருவாக்கினால் நல்ல லாபத்தை பார்க்கலாம் என்றார்.


Click it and Unblock the Notifications











