Leo: “லியோ போஸ்ட் புரொடக்ஷன் முடிஞ்சிடும்... ரிலீஸ் தள்ளிப் போகாது..” இது என்ன புது பஞ்சாயத்து!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
நேற்று மாலை லியோ ட்ரெய்லரை ரிலீஸ் செய்த படக்குழு, மேலும் சில அப்டேட்களை வெளியிட முடிவு செய்துள்ளது.

இதனிடையே லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதால், விஜய் சோகத்தில் இருப்பதாக தயாரிப்பாளர் கூறியுள்ளார்.
அதேபோல், லியோ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பில்லை எனவும் அவர் அப்டேட் கொடுத்துள்ளார்.
லியோ ரிலீஸ் சொன்னபடி நடக்கும்
விஜய்யின் லியோ படத்துக்கு கோலிவுட் மட்டுமின்றி இந்தியத் திரையுலகமே அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையமைத்துள்ள லியோ, வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. லியோ ட்ரெய்லர் நேற்று வெளியாகி செம்ம மாஸ் காட்டி வருகிறது. முன்னதாக இந்தப் படத்தில் இருந்து இரண்டு பாடல்களும் வெளியாகியுள்ளன.
லியோ ட்ரெய்லரில் அதிக வன்முறை காட்சிகள் இருப்பதும், விஜய் கெட்டவார்த்தை பேசுவதும் சர்ச்சையாகியுள்ளது. அதேபோல், லியோ FDFS, ஸ்பெஷல் ஷோக்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கப்பட்டதும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், லியோ படத்தின் சில தரமான அப்டேட்களையும் விஜய்யின் ரியாக்ஷன் பற்றியும் தயாரிப்பாளர் லலித் குமார் மனம் திறந்துள்ளார்.
கடந்த வாரம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் லியோ ஆடியோ லான்ச் திடீரென கேன்சல் ஆனது. இதனால், ரசிகர்களை சந்திக்க முடியாமல் போனதை நினைத்து விஜய் கவலையில் இருப்பதாக தயாரிப்பாளர் லலித் குமார் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இதனால், லியோ ப்ரொமோஷன் ஈவன்ட் நடத்த அவர் முடிவு செய்துள்ளாராம்.
அதேபோல், லியோ லோகேஷின் LCU-இல் வருமா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதுபற்றி இப்போது பேச முடியாது. லியோ படத்தைப் பார்க்கும் போது உங்களுக்கே பல சர்ப்ரைஸ்கள் காத்திருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும், தமிழ்நாட்டில் லியோ அட்வான்ஸ் புக்கிங் வரும் 15ம் தேதி முதல் ஓபனாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் பற்றிய அப்டேட்களும் தொடர்ச்சியாக வெளியிடப்படும் என லலித் குமார் அப்டேட் கொடுத்துள்ளார்.
முக்கியமாக லியோ படத்திற்காக யாருமே எதிர்பார்க்காத வகையில் கிராண்ட் ப்ரோமோஷன் ஈவன்ட் நடைபெறுவது கன்ஃபார்ம் எனவும் லலித் குமார் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். அதேபோல், லியோ உலகம் முழுவதும் 25000 முதல் 30000 ஸ்க்ரீன்களில் திரையிடப்படும் எனவும், இது கோலிவுட்டில் இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், லியோ முதல் பாதிக்கு பின்னணி இசையமைக்கும் பணிகளை அனிருத் முடித்துவிட்டதாகவும், தற்போது இரண்டாம் பாதிக்கு பிஜிஎம் ஒர்க் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 10ம் தேதிக்குள் லியோ போஸ்ட் புரொடக்ஷன் மொத்தமாக முடிந்துவிடும், எக்காரணம் கொண்டும் லியோ ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பே இல்லை என்றும் லலித் குமார் அப்டேட் கொடுத்துள்ளார். லியோ மூன்றாவது பாடல் அடுத்த வாரம் திங்கள் கிழமை வெளியாகும் எனவும், அது ஃபேமிலி சாங் என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











