Leo: லியோ ஸ்பெஷல் ஷோ... அரசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை... விஜய் ரசிகர்கள் வெயிட்டிங்!

சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, வரும் 19ம் தேதி வெளியாகிறது.

தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கு இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், லியோ படத்தை 5 காட்சிகள் திரையிட அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 Leo: Producers request permission for a special show of Leo movie

லியோ ஸ்பெஷல் ஷோவுக்கு கோரிக்கை: விஜய் நடித்துள்ள லியோ வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். கோலிவுட் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ள லியோ, மிகப் பெரிய வெற்றிப் பெறும் என சொல்லப்படுகிறது.

இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் கேன்சலான நிலையில், உடனடியாக செகண்ட் சிங்கிளை வெளியிட்டது படக்குழு. அதனைத் தொடர்ந்து லியோ ட்ரெய்லரும் விரைவில் வெளியகாவுள்ளது. இதனிடையே லியோ இசை வெளியீட்டு விழா கேன்சலாக அரசியல் அழுத்தம் தான் காரணம் என செய்திகள் வெளியாகியிருந்தன. அதேபோல் லியோ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

கடந்த பொங்கல் பண்டிகையில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு திரைப்படங்கள் ஒரேநாளில் வெளியாகின. அப்போது ரோகிணி திரையரங்கில் வாரிசு, துணிவு படத்தின் FDFS காட்சி பார்க்க ரசிகர்கள் அதிகளவில் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அஜித் ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். அதனால், இனி எந்த ஹீரோவின் படமாக இருந்தாலும் அதிகாலை 4 மணி FDFS காட்சிக்கு அனுமதி கிடையாது என தமிழ்நாடு அரசு அறிவித்தது.

 Leo: Producers request permission for a special show of Leo movie

அதேபோல், தினசரி 4 காட்சிகளைத் தவிர, ஸ்பெஷல் ஷோவுக்கும் அனுமதி கேட்டால் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, விஜய்யின் லியோவுக்கு அதிகாலை FDFS, ஸ்பெஷல் ஷோ இரண்டுக்குமே இதுவரை அனுமதி கிடைக்கவில்லையாம். ஆனால், தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் அதிகாலை 4 மணிக்கு லியோ திரையிடப்படவுள்ளதாக தெரிகிறது. லியோ படத்திற்கு அதிகளவில் எதிர்பார்ப்பு உள்ளதால் திரையரங்க உரிமையாளர்களும் ஸ்பெஷல் ஷோ அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா தலைமையிலான தயாரிப்பாளர்கள், தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதில் லியோ படத்திற்கு 5 காட்சிகள் திரையிட அனுமதி வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தால் லியோ திரைப்படம் காலை 8 அல்லது 9 மணிக்கு திரையிடலாம் எனத் தெரிகிறது. இதனையடுத்து விஜய் ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X