Leo Public Review: இதுமாதிரி ஒரு விஜய் படம் வந்ததே இல்லை!.. தளபதி ரசிகர்களை ஹேப்பியாக்கிய லோகி!

சென்னை: கடந்த ஒரு வருடமாக லியோ.. லியோ.. லியோ என ரசிகர்கள் அப்டேட் கேட்டும், பல பிரச்சனைகளை சந்தித்தும் வந்த நிலையில், கடைசியாக இன்று லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகி தளபதி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தி உள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் படத்திற்கு பிறகு இயக்கி உள்ள லியோ திரைப்படமும் எல்சியூ என்பதால், அதன் ரீச் வேறலெவலில் உள்ளது.

விஜய் ரசிகர்கள் மற்றும் பொது மக்கள் லியோ படத்தை பார்த்து விட்டு கொடுக்கும் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

Leo Public Review: A very intense action thriller movie done by Vijay

தளபதியை இப்படி பார்க்கல: இதுவரை பார்க்காத அளவுக்கு தளபதி விஜய்யை லோகேஷ் கனகராஜ் சும்மா செதுக்கி ஸ்க்ரீன்ல காட்டியிருக்காரு.. முதல் பாதி முழுக்க குடும்பத்தை காப்பாற்ற போராடும் பார்த்திபனும், இரண்டாம் பாதியில் லியோ தாஸாகவும் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளார் விஜய் என மற்ற மாநில ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சூப்பர்.. சூப்பர்: அதிகாலையிலேயே பெண் ரசிகைகள், குடும்பங்கள் என பலரும் தியேட்டருக்கு படையெடுத்த நிலையில், லியோ படம் சூப்பர் சூப்பர் என பெண் ரசிகை ஒருவர் சொல்லி விட்டு, தளபதினாலே பிடிக்கும்ங்க, லியோ படம் இண்டஸ்ட்ரி ஹிட் என தங்களது கருத்துக்களை கூறியுள்ளனர்.

ஓவியரான அர்ஜுன்: லியோ படத்தின் இடைவேளை காட்சியின் போது லியோ தாஸின் உருவத்தை அப்படியே பார்த்திபன் விஜய்யாக மாற்றி தெறிக்க என்கிற வசனத்தை சொல்லி தியேட்டரை தெறிக்கவிட்டுள்ளார் அர்ஜுன்.

Leo Public Review: A very intense action thriller movie done by Vijay

ஃபிளாஷ்பேக் சொதப்பல்: லியோ தாஸ் ஏன் பார்த்திபனாக மாறுகிறார் என்கிற ஃபிளாஷ்பேக் மட்டும் பெரிதாக கனெக்ட் ஆக வில்லை. மற்றபடி ஒட்டுமொத்த படமும் ஆக்‌ஷன் காட்சிகளும் பின்னி பெடலெடுத்துள்ளதாக இந்த ரசிகர் விமர்சித்துள்ளார்.

Leo Public Review: A very intense action thriller movie done by Vijay

பொதுமக்கள் வரவேற்பு: கொடுத்த காசுக்கு மேல படம் வொர்த்தா இருக்கு என்றும் ஆக்‌ஷனிலும் நடிப்பிலும் இதுவரை பார்க்காத விஜய்யை பார்த்து விட்டோம். கிளைமேக்ஸில் செம சர்ப்ரைஸ் காத்திருக்கு என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X